கேரளாவில் முதியோர் இல்லத்தில் காதலித்த கோச்சானியன், லட்சுமி அம்மாள் திருமணம் செய்து கொண்டனர்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ராமவர்மபுரத்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் இருந்த கோச்சானியனும் (67), லட்சுமியம்மாளும் (66) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் ராமாவர்மபுரத்தில் முதியோர் இல்லத்தில் நடந்த இந்த திருமணத்தில் வேளாண்துறை அமைச்சர் சுனில் குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கேட்டரிங் தொழில் வந்த லட்சுமியம்மாளின் கணவர் காலமான நிலையில், அவரது உதவியாளரான கோச்சானியனிடம் தன் மனைவியை பார்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு பின் தனியாக வசித்து வந்த லட்சுமியம்மாளுக்கு அவ்வப்போது தேவையான உதவியை மட்டும் கோச்சானியன் செய்து வந்துள்ளார்.
21 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த பின்பு லட்சுமி அம்மாள் உறவினர்களுடன் சென்றுவிட்டார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ராமாவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் லட்சுமி அம்மாள் சேர்ந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு அங்கு கோச்சானியானும் சேர்க்கப்பட்டுள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொண்ட இருவரும் மீதமுள்ள காலத்தில் கணவன்-மனைவியாக வாழ முடிவு செய்தனர். அதன்படி அவர்களது திருமணம் தற்போது நடந்து முடிந்துள்ளது. முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருமண ஏற்பாடுகளை செய்து முடிக்க, பலர் அளித்த நிதியுதவியின்படி இந்த திருமணம் நடந்துள்ளது.
Kerala: 67-year-old Kochaniyan Menon and a 65-year-old Lakshmi Ammal, tied the knot yesterday at a government-run old-age home in Ramavarmapuram in Thrissur district. pic.twitter.com/EXJeXyv34G
— ANI (@ANI) December 29, 2019
மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.