கற்பழிப்பு தலைநகரமாக மாறும் உன்னாவ் மாவட்டம்; 2019-ல் 86 கற்பழிப்புகள்

உன்னாவோ மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக 185 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் கற்பழிப்பு வழக்கு மட்டும் 86 ஆகும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 7, 2019, 08:05 AM IST
கற்பழிப்பு தலைநகரமாக மாறும் உன்னாவ் மாவட்டம்; 2019-ல் 86 கற்பழிப்புகள் title=

உன்னாவ்: தீக்காயத்தால் கிட்டத்தட்ட 90 சதவீதம் பாதிக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இறந்தார். உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் மாநிலத்தின் "கற்பழிப்பு நகராக" உருவெடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் நவம்பர் வரை 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. உன்னாவோ மாவட்டத்தில் மக்கள் தொகை 31 லட்சம். இது மாநில தலைநகரான லக்னோவிலிருந்து 63 கி.மீ தொலைவிலும், கான்பூரிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் உன்னாவ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 185 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குல்தீப் சிங் செங்கார் கற்பழிப்பு வழக்கு மற்றும் பெண்ணை தீ வைத்துக் கொன்ற வழக்கு தவிர வேறு முக்கியமான வழக்குகளும் உள்ளன. இதில் பூர்வாவில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

உன்னாவோவின் அசோஹா, அஜ்கெய்ன், மக்கி மற்றும் பங்கர்மாவ் ஆகிய இடங்களில் கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் பெரும்பாலானவற்றில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டடு'ள்ளனர் அல்லது அவர்கள் தலைமறைவாக உள்ளனர். மாநிலத்தில் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு காவல்துறையை தான் காரணம் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அஜ்கைனில் வசிக்கும் ராகவன் ராம் சுக்லா, "உன்னாவோவின் காவல்துறையினர் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கு தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் (போலிசார்) எஜமானர்களிடமிருந்து அனுமதி பெறும் வரை ஒரு அங்குலம் கூட நகர மாட்டார்கள். இந்த அணுகுமுறை தான் குற்றவாளிகளுக்கு தவறு செய்ய துணிவை தருகிறது எனக் கூறினார்.

உத்தரபிரதேச சட்டசபை சபாநாயகர் ஹிருதே நாராயண் தீட்சித், சட்ட அமைச்சர் பிரிஜேஷ் பதக், பாரதிய ஜனதா கட்சி எம்.பி போன்றவர்களும் இந்த குற்றசாட்டு கீழ் வருவது தான் மிகவும் வேதனையளிக்கிறது.

உன்னாவ் சம்பவத்தை குறித்து பேசிய ஒரு உள்ளூர் வழக்கறிஞர், "இங்கே அரசியல் தான் குற்றத்தை ஊக்குவிக்கிறது. தலைவர்கள் அரசியலில் குற்றங்களை செய்கிறார்கள். காவல்துறையினர் அவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். அதவாது அவர்கள் ஏழை மற்றும் விவசாயிகளையும் கூட விட்டு வைப்பது இல்லை.

சமீபத்தில் விவசாயிகளிடம் இருந்து ஒரு புதிய நகரத்திற்கான நிலம் கையகப்படுத்திய போதும் கூட அவர்கள் வன்முறையை நாடினார்கள். ஆனாலும் காவல் துறை அவர்களை தற்காத்தது என்றார். அவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாக ஒரு வழக்கு கூட இல்லை" எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.

இதையெல்லாம் பார்க்கும் போது பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத்தின் அரசு என்ன தான் செய்துக்கொண்டு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. பெண்களுக்கு எதிராக 185 வழக்குகள் பதிவாகி உள்ளது. அதில் கற்பழிப்பு வழக்கு மட்டும் 86 ஆகும். உன்னாவ்: மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் இந்த கொடுமைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உன்னாவ் மக்களிடம் மட்டுமில்லை, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் இருக்கிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News