டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக மீண்டும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்ள உள்ளது. இதுவரை நாட்டில் யாரும் மேற்கொள்ளாத இந்த நல்ல முயற்ச்சியை முதல் முறையாக ஆம் ஆத்மி அரசு செயல்படுத்துகிறது.
அதாவது பிறப்பு, இறப்பு, சாதி, திருமண சான்றிதழ்கள், பென்சன், ஓட்டுநர் உரிமம், குடிநீர் உட்பட 100 வகையான அரசு சேவைகள் பொது மக்களை தேடி வீட்டுக்கே வரும் என்ற புதிய திட்டத்தை அறிமுக படுத்தி உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரும். இந்த திட்டத்திற்கு மொபைல் சஹாயக் (Mobile Sahayaks) என்று பெயர் வைக்கபட்டு உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டே இத்திட்டம் கொண்டுவரப்பட்டு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. சமீபத்தில் டெல்லியில் அதிக அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அடுத்து, இந்த திட்டத்திற்கு சில திருத்தங்கள் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த "மொபைல் சஹாயக்" திட்டத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் மூலம் மக்களுக்கு பலமணி நேரம் மிச்சமாகும். லஞ்சம் ஒழிக்கப்படும். அதிகாரிகள் வீட்டுக்கே வந்து ஆவணங்கள் சரிபார்ப்பது, கைரேகை எடுப்பது, டிஜிட்டல் முறையில் புகைப்படம் எடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த திட்டம் வெற்றி பெரும் பட்சத்தில், நாடு முழுவதிலும் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.