புதிய தலைமை தேர்தல் கமிஷனராக அச்சல்குமார் ஜோதி தற்போதைய நஜீம்ஜைதி வரும் 6ம் தேதி முதல் அவரது பதவிக்காலகம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் குஜராத் தலைமை செயலாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ஒரு ஆண்டு காலம் பதவி வகிப்பார். இவர் நாளை மறுநாள் ( வரும் 6ம் தேதி) பதவி ஏற்கிறார்.
இந்திய நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக அச்சல்குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் வியாழக்கிழமை அப்பதவியை ஏற்கவுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் நஜீம் ஜைதி, அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகிய 3 பேர் தேர்தல் ஆணையர்களாக தற்போது உள்ளனர். தற்போது இவர்களில் தலைமைத் தேர்தல் கமிஷனராக நஜீம் ஜைதி இருக்கிறார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் கமிஷனர் பதவியிலிருந்து நஜீம் ஜைதி இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு அச்சல்குமார் ஜோதியை மத்திய அரசு நியமித்தது.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள அச்சல்குமார் ஜோதி குஜராதில் தலைமை செயலாளராக பணியாற்றியவர். அச்சல்குமார் ஜோதி நாட்டின் 21-வது தலைமைத் தேர்தல் கமிஷனர் ஆவார்.
தலைமைத் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி ஓய்வு பெறுவதால், 3 தேர்தல் ஆணையர் பதவிகளில் ஓரிடம் காலியாகிறது. இதை நிரப்பும் வகையில், மேலும் ஒரு தேர்தல் கமிஷனரை மத்திய அரசு நியமிக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.