'உங்கள் தைரியத்திற்கு ஹேட்ஸ் ஆஃப்'... கங்கனாவை பகத் சிங்குடன் ஒப்பிடும் விஷால்!!

பகத்சிங் செயலுக்கு ஒத்ததாக நடிகை கங்கணாவின் செயல்கள் இருப்பதாக நடிகர் விஷால் புகழ்ந்திருக்கிறார்.!

Last Updated : Sep 11, 2020, 12:03 PM IST
'உங்கள் தைரியத்திற்கு ஹேட்ஸ் ஆஃப்'... கங்கனாவை பகத் சிங்குடன் ஒப்பிடும் விஷால்!! title=

பகத்சிங் செயலுக்கு ஒத்ததாக நடிகை கங்கணாவின் செயல்கள் இருப்பதாக நடிகர் விஷால் புகழ்ந்திருக்கிறார்.!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput), மரணம் தொடர்பாக கங்கனா ரணாவத் (Kangana Ranaut) மகாராஷ்டிரா அரசு மற்றும் போலீசார் மீது கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் இவர், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீர் போல் இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும், கங்கனா ரணாவத் மும்பைக்கு வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மிரட்டல் விடுத்தார். 

இதற்கு பதிலளித்த கங்கனா, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து மும்பை வருவதாகவும், முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என்றும் பதிலடி கொடுத்திருந்தார். இதனையடுத்து மும்பை திரும்பிய அவருக்கு மத்திய அரசு Y+ பாதுகாப்பு வழங்கியது. இதனிடையே, மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கனா ரணாவத் வீடு அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், நேற்று செப்., 9 மும்பை மாநகராட்சி நிர்வாகம் அவரின் வீட்டை இடித்ததால் மேலும் சர்ச்சை வெடித்தது. 

ALSO READ | நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு மற்றும் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

இதன் காரணமாக நடிகை கங்கனாவிற்கும், மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் கங்கனா ரணாவத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கரித்து ஒன்றை செய்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “அன்பிற்குரிய கங்கனா, உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். எது சரி, எது தவறு என்பது குறித்து குரல் கொடுக்க நீங்கள் தயங்கியதே இல்லை. இது உங்கள் தனிப்பட்ட பிரச்னை இல்லை.

இருப்பினும், அரசின் எதிர்ப்பை எதிர்கொண்டு வலிமையாக இருந்தீர்கள். அது உங்களை மிகப்பெரிய உதாரணமாக்கியுள்ளது. தற்போது நீங்கள் செயல்கள், 1920- களில் பகத்சிங் செய்ததை போலவே உள்ளது. பிரபலங்களுக்கும் சரி, சாதாரண மக்களுக்கும் சரி, ஒரு விஷயம் சரியில்லாதபோது அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமையும்” இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

Trending News