மாணவர்கள், முதியவர்களுக்கு இலசவ பேருந்து சேவை - அரசு அதிரடி..!

பெண்களை தொடர்ந்து மாணவர்கள், முதியவர்களுக்கு இலசவ பேருந்து சேவை வழங்குவதாக டெல்லி முதலவர் அறிவிப்பு..!!

Last Updated : Oct 30, 2019, 04:19 PM IST
மாணவர்கள், முதியவர்களுக்கு இலசவ பேருந்து சேவை - அரசு அதிரடி..! title=

பெண்களை தொடர்ந்து மாணவர்கள், முதியவர்களுக்கு இலசவ பேருந்து சேவை வழங்குவதாக டெல்லி முதலவர் அறிவிப்பு..!!

மெட்ரோ மற்றும் டெல்லி பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணம் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் கெஜ்ரிவால் வெளியிட்டார். பேருந்துகளில் இலவச பயணம் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சிறிது கால அவகாசம் மெட்ரோ நிர்வாகம் கேட்டிருப்பதால், மெட்ரோவில் மட்டும் இத்திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக 150 கோடி ரூபாயை வழங்க டெல்லி சட்டப்பேரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், நேற்று டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச பயண சலுகை திட்டம், மாணவர்கள் மற்றும் வயது மூத்தோரும் இலவசமாக பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பயண சலுகை திட்டமானது சமூகத்தில் இருக்கும் பாலின பேதத்தை குறைத்து, பெண்கள் திறனை வளர்க்க உதவும் என்று, வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தியிருக்கும் "AK App' என்ற செயலியில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கெஜ்ரிவால் புதன்கிழமை ஜீ நியூஸ்க்கு அளித்த பிரத்யேக உரையாடலில்; "நம் நாட்டில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அவர்களுக்காக இந்த இலவச பேருந்து சேவையை நாங்கள் தொடங்கினோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்" என்று கூறினார். மேலும், "மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச பஸ் பயணங்களை வழங்கும்" என்று கெஜ்ரிவால் மேலும் கூறினார்.

இவர்கள் மட்டுமல்லாமல், தங்கள் வீடுகளில் இருந்து தொலைவில் இருக்கும் அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்களும் இலவசமாகவே பயணிக்கலாம்; பேருந்து கட்டணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் கீழ் டெல்லி போக்குவரத்து கழகம் மற்றும் பொது பேருந்துகளில் 10 ரூபாய் மதிப்புடைய பிங்க் நிற டிக்கெட்டுகள் பெண் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. எத்தனை டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படுகிறதோ அத்தனை டிக்கெட்டுகளுக்கான தொகையை அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

வயது மூத்தவர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இலவச பயண சலுகை இனி வரும் காலங்களில் வழங்கப்படும் என்று அந்த செயலியில் தெரிவித்துள்ளார். மேலும், எல்லா முன்னெடுப்புகளையும் ஒரே தடவையில் நடைமுறைப்படுத்திவிட முடியாது. ஆனால் அதை நிச்சயம் செய்து காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். அதோடு, தற்போது இதை பெண்களுக்கு அறிமுகப்படுத்தி தொடங்கியிருக்கிறோம், இப்போது அதன் பலன்களை பார்க்கிறோம். இந்த திட்டத்தினால் கிடைக்கும் பலன்களின் அடிப்படையில், வயது மூத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறைக்கு ரூ.479 கோடி கூடுதல் மானியம் வழங்கவும் சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இதில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு ரூ .140 கோடி மானியமும், டெல்லி மெட்ரோவில் இலவச பயணத்திற்கு ரூ .150 கோடியும் மானியமாக சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. ஜூன் மாதத்தில், டெல்லியில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இருப்பினும், மெட்ரோவில் இலவச பயணத்திற்கான ஒப்புதல் தாமதத்துடன், டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. 

 

Trending News