Aircel-Maxis: ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க CBI-க்கு அனுமதி!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு குறித்து சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் CBI-க்கு அனுமதியளித்துள்ளது!  

Last Updated : Nov 26, 2018, 05:04 PM IST
Aircel-Maxis: ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க CBI-க்கு அனுமதி!  title=

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு குறித்து சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் CBI-க்கு அனுமதியளித்துள்ளது!  

கடந்த 2006 ஆம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்துவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர்கள் மீது CBI மற்றும் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு குறித்து இன்றைய விசாரணையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் CBI அனுமதியளித்துள்ளது. .சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. எனவே அவர்களை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் CBI நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும், இது தொடர்பாக CBI தரப்பில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் உள்ளதாகவும், இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடன் வெளிநாடுகளில் உள்ள இவர்களது வங்கி கணக்குகள் உடனடியாக மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர் 18 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி சிபிஐ தலைமை நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார். 

 

Trending News