ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி: விதிகளில் மாற்றம்...பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது

Central Government Employees Latest News: சமீபத்தில், மத்திய அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான புதிய புதுப்பிப்பை வெளியிட்டது. அரசு வெளியிட்ட உத்தரவு ஊழியர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Pension and Gratuity: அரசு ஊழியர்கள் பணிகளில் அலட்சியம் காட்டினால், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பலன்களை இழக்க நேரிடும் என்று மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது கடுமையான குற்றத்தை செய்தால், அவர் இந்த சலுகைகளை இழக்க நேரிடும்.

1 /11

7வது ஊதியக் குழு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் விளைவாக, பெரும்பாலான ஊழியர்களின் நிதி நிலையும் இப்போது நல்ல முறையில் முன்னேறியுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கும் பல வித நல்ல செய்திகள் தொடர்ந்து கிடைத்துள்ளன.

2 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் எவ்வளவு முக்கியமோ, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை ஆகியவற்றுக்கும் அதே அளவு முக்கியத்துவம் உள்ளது. இருப்பினும், சமீபத்தில் அரசு வெளியிட்ட உத்தரவு ஊழியர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.  

3 /11

அரசு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது: அரசு ஊழியர்கள் பணிகளில் அலட்சியம் காட்டினால், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பலன்களை இழக்க நேரிடும் என்று மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது கடுமையான குற்றத்தை செய்தால், அவர் இந்த சலுகைகளை இழக்க நேரிடும்.

4 /11

பணியில் காட்டப்படும் அலட்சியம் தொடர்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் கவனம் செலுத்தாவிட்டால், ஊழியர்கள் நிதி ரீதியான பிரச்சனைகளையும் இன்னும் சில நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

5 /11

ஒரு பணியாளர் விதிகளை மீறினாலோ அல்லது தனது கடமைகளில் கவனக்குறைவாக இருந்தாலோ, அவர் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டி பலன்களை இழக்க நேரிடும். 8வது ஊதியக் குழுவிற்குக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு இந்த எச்சரிக்கை குறிப்பாக முக்கியமானது. ஏனெனில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், இந்த நபர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

6 /11

பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தும் அதிகாரம் அந்தந்தப் பணியாளருக்கான நியமன அதிகாரத்தில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளுக்கு இருக்கும் என ஊடகங்களில் வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, ஒரு ஊழியர் தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவில் இருந்து ஓய்வு பெற்றால், அவரது ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையை நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) பெற்றிருப்பார். 

7 /11

பணியில் இருக்கும் போது, ​​துறை ரீதியான அல்லது நீதித்துறை விசாரணையில் ஒரு ஊழியர் குற்றவாளியாகக் கருதப்பட்டால், ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகள் தொடர்பான சரியான முடிவை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

8 /11

மத்திய சிவில் சர்வீசஸ் பென்ஷன் விதிகள் 2021ன் கீழ் அரசாங்கம் சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது ஏதேனும் கடுமையான அல்லது கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டால், அவருக்கு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடைப் பலன்கள் கிடைக்காது என்பதை இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, அதை மாநில அரசுகளும் மாநில அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

9 /11

பணி ஓய்வுக்கு பிறகு, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடையைப் பெற்ற பின்னர், ஏதேனும் தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டால், அவரது ஓய்வூதியம் அல்லது பணிக்கொடையின் முழு அல்லது பகுதி அளவு தொகையை திரும்பப் பெறலாம் என்று மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

10 /11

இந்தப் புதிய விதியின்படி, ஒரு ஊழியரின் ஓய்வூதியம் அல்லது கிராஜுவிட்டி நிறுத்தப்பட்டாலோ அல்லது அது குறைக்கப்பட்டாலோ, அந்த ஊழியருக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி 44ன் படி மாதம் ஒன்றுக்கு ரூ.9000 குறைந்தபட்ச நிலையான தொகை வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

11 /11

இந்த மாற்றத்தின் மூலமாக ஊழியர்களின் சீரான செயல்பாட்டையும், அரசாங்க நிதிகளின் பாதுகாப்பையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.