ஹைதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கற்பழிப்பு-கொலை குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டர்!
டெல்லி: தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்ற போது 4 பேரும் தப்பிச் செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல்!!
கடந்த மாதம் 27 ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் பணி முடிந்து இரவு வீடு திரும்பும் போது உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள செர்லப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்களை உள்ளூர் ஊடகமான naidunia செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்; ``பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தப் பெண் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களைக் கட்டியுள்ளனர். பின்னர், மருத்துவரின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர். பெண் மருத்துவர் மயக்கம் அடைந்தபிறகு அவரை லாரியில் ஏற்றி சம்பவம் நடந்த பாலத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை எரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போதுதான் அந்தப் பெண் உயிருடன் இருந்தது தங்களுக்குத் தெரியவந்தது என்றும், அதுவரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்ததாகவும் அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
Telangana Police: All four people accused in the rape and murder of woman veterinarian in Telangana have been killed in an encounter with the police. More details awaited. pic.twitter.com/AxmfQSWJFK
— ANI (@ANI) December 6, 2019
இந்நிலையில், குற்றவாளிகளை விசாரணைக்காக சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். பெண் டாக்டரை எரித்து கொன்ற இடத்திற்கு அழைத்து சென்ற போது, குற்றவாளிகள், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து , அந்த இடத்திலேயே, குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.