Superfoods For Eyes: கண்கள் நம் உடலின் மிக முக்கியமான மற்றும் சென்ஸிடிவ் ஆன பகுதியாகும். மாறிவரும் வாழ்க்கை முறை, கணிணி திரையின் முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது, கேஜெட்டுகளை அதிகம் பயன்படுத்துவது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால், இன்றைய காலகட்டத்தில் கண் பிரச்சனைகள் சகஜமாகிவிட்டன. இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, சிறு வயதிலேயே கண்ணாடியை நாட வேண்டிய நிலைமை உண்டாகும் இன்றைய சூழ்நிலையில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.
நமது உணவுமுறை கண்பார்வைத் திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்பார்வை குறைபாடு வராமல் தடுக்கும், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கேரட்
கண் ஆரோக்கியம் என்றதும் நமது நினைவிற்கு வருவது கேரட் தான், வைட்டமின் ஏ என்னும் பீட்ட கரோட்டின அதிகம் உள்ள கேரட் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கண்பார்வையை ஆரோக்கியமாக பராமரிக்க கேரட் ஜூஸ் சாப்பிடுவதும் அல்லது பச்சையாக சாப்பிடுவதும் உதவும். கண் சோர்வு நீங்கி பார்வை மேம்படும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் கண் ஆரோக்கியத்திற்கும், கண் நோய்களை தடுக்கவும் மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் கண் செல்களை மீண்டும் உருவாக்கி, பார்வையை மேம்படுத்துகிறது. கண்களின் இரத்த நாளங்களை பலப்படுத்துகிறது. கண்புரை ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
பச்சை இலை காய்கறிகள்
கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் கண் தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சுகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகின்றன. ஆரஞ்சு பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், கண்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்து கண்புரை அபாயத்தை தடுக்கிறது.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இது மாகுலர் டிஜெனரேஷன் (வயது தொடர்பான கண் நோய்) தடுக்க உதவுகிறது. தினமும் 4-5 ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும்.
முட்டை
முட்டையில் வைட்டமின் ஏ உள்ளதால் கண்களுக்கு நன்மை பயக்கும். மேலும், வயது தொடர்பான மாகுலர் சிதைவு பாதிப்பு மற்றும் கண்புரை அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும் இதில் உள்ள லுடீன், ஜீயாக்சாண்டின் என்னும் ஆக்ஸிஜனேற்றங்கள் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியினால், கண்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றன. மாலைக் கண் நோயை தடுக்கவும் முட்டை உதவும்.
மீன்
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், குறிப்பாக சால்மன் மற்றும் டுனா, கண் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இது உலர் கண் நோய்க்குறி மற்றும் பிற கண் பிரச்சனைகளைத் தடுக்கிறது. சைவ உணவு பிரியர்கள், இதற்கு பதிலாக ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை உட்கொள்ளலாம்.
கண்கள் ஆரோக்கியமாக இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. உங்கள் கண்களை ஓய்வெடுக்க போதுமான தூக்கம் தேவை.
2. தினமும் 20-20-20 விதியைப் பின்பற்றவும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகளுக்கு 20 அடி தூரம் பாருங்கள்.
3. உங்கள் கண்களை தவறாமல் பரிசோதிக்கவும்.
4. தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சூரிய ஒளியில் சன்கிளாஸ்களை அணியுங்கள்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை.... 100 நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய் ஜூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ