கடலில் மூழ்கிய மனைவியைத் தேடி அப்செட் ஆன போலீஸார்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

விசாகப்பட்டினத்தில் கணவருடன் கடற்கரைக்கு சென்ற பெண் ஒருவர் காணாமல் போனதால் கடல் முழுவதும் சல்லடையிட்டு தேடிய போலீஸாருக்கு கடைசியில் டுவிஸ்ட் காத்திருந்தது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 28, 2022, 01:48 PM IST
  • கடற்கரையில் கணவருடன் சென்ற மனைவி மாயம்
  • கடற்படையினர் தேடி சல்லடையிட்டு அப்செட் ஆகினர்
  • கடைசியில் பெண் குறித்த தகவல் தெரிந்து ஷாக் ஆன கணவர்
கடலில் மூழ்கிய மனைவியைத் தேடி அப்செட் ஆன போலீஸார்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்! title=

ஐதராபாத்தில் தங்கி பார்மா கம்பேனியில் பணி புரிந்து வருபவர் ஸ்ரீநிவாஸ். இவருக்கு கடந்த 2020 ஜூலை25ல் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாய் பிரியா என்ற பெண்ணுடன்  திருமணம் நடந்தது.

இந்நிலையில் இந்த தம்பதியினர் சாய் பிரியாவின் தாயார் வீட்டிற்கு தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடுவதற்காக வந்திருந்தனர். அப்போது திருமண நாளின் மாலை விசாகப்பட்டினத்திலுள்ள பிரபல ஆர்.கே கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு மனைவியுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்த ஸ்ரீநிவஸிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனால் சற்று கவனம் சிதறிய ஸ்ரீநிவாஸ் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு திரும்பி பார்த்தபோது அங்கு சாய் பிரியா இல்லை. பின்னர் அவர் இருந்த இடத்தில் இருந்து சற்று துளைவு வரை சாய் பிரியாவை ஸ்ரீநிவாஸ் தேடியுள்ளார். ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாததால், சாய் பிரியா கடலில் மூழ்கியோ, அலையில் இழுத்துச்செல்லப்பட்டோ இருப்பார் என்று அவர் சந்தேகித்தார். 

மேலும் படிக்க | ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ 

இதையடுத்து ஸ்ரீநிவாஸ் கடற்கரை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் கடற்கரை போலீஸார் முழு வீச்சில் சாய் பிரியாவை தேடுயுள்ளனர். ஹெலிகாப்டர், படகு, மீட்பு படை வீரர்கள் என அனைத்தையும் இறக்கி சாய் பிரியாவை போலீஸார் தேடி வந்தனர்.

பல மணி நேரம் நீடித்த தேடலில் சாய் பிரியா கிடைக்காததால் அவர் கடலில் அடுத்துச் செல்லப்பட்டு, ஆழத்தில் சிக்கியிருப்பார் என்று போலீஸார் எண்ணினர்.

இந்த தேடுதல் வேட்டைக்காக ஆந்திர அரசு சுமார் ரூ.1 கோடி செலவழித்து இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சாய் பிரியாவின் செல்போனில் இருந்து பெங்களூருவில் சிக்னல் வந்துள்ளது.

Image source - Great andhra

மேலும் ஒருமுறை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலும் சாய் பிரியாவின் செல்போனில் இருந்து சிக்னல் வந்துள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார் சாய் பிரியாவின் செல்போனை டிராக் செய்தனர்.

பின்னர் சாய் பிரியாவின் செல்போனில் இருந்து சாய் பிரியாவின் அம்மாவிற்கு தான் பத்திரமாக இருப்பதாகவும், தனக்கு எதுவும் நேரவில்லை எனவும் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், சாய் பிரியா திருமணத்திற்கு முன்பிலிருந்தே நெல்லூரைச் சேர்ந்த ரவி என்பவருடன் காதலில் இருந்ததும், திருமணத்திற்கு முன்பு இருமுறை காதலனுடன் ஓடிச்சென்றுள்ளதும் தெரிய வந்தது.

இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் ஸ்ரீநிவாஸை மணந்த சாய் பிரியா, திருமண வாழ்வில் ஈடுபாடின்றி இருந்துள்ளார். இதனால் சொந்த ஊருக்கு வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சாய் பிரியா தன் காதலனுடன் தப்பியோடியுள்ளார்.

ஆனால் மனைவி மீது மிகுந்த பாசம் வைத்துள்ள கணவர் மனைவியை கடல் அலை இழுத்துச்சென்றது என நம்பி போலீஸாரை மெனக்கெட வைத்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News