Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

Wife Husband Fight Video: கணவன் மனைவி வீடியோ: சாப்பிடாமல் தூங்கிய கணவன், மனைவி அடித்ததால் தலைஇல் ரத்தம் தெரித்தது. நீங்களே வீடியோவை பார்க்கவும்

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 14, 2023, 04:47 PM IST
  • பாசம் இருக்கலாம்.. அதுக்காக இப்படியா ஒரு மனுசன போட்டு புரட்டி எடுப்பது.
  • கணவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றி உள்ளனர்.
  • அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன
Viral Video: சின்ன விசியத்துக்காக கட்டுன புருஷனை இப்படி அடிப்பது.. பாவம் 15 தையல்கள்

Viral Video: பாசம் இருக்கலாம்.. அதுக்காக இப்படியா ஒரு மனுசன போட்டு புரட்டி எடுப்பது. கணவனை மோசமாக அடிக்கும் மனைவி. வீடியோவை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அட.. இந்த விசியத்துக்காகவா கட்டுன புருஷனை அடிப்பது. கணவனை அடித்ததற்கான காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவில் இருக்கும் ஊடகவியலாளர் கூறும் அறிக்கையின்படி, தனது கணவர் இரவு உணவு சாப்பிடாமல் தூங்கி விட்டார். இதனால் கோபமடைந்த மனைவி கிரிக்கெட் விளையாடும் மட்டையால் அடித்ததால் தலையில் பலமாக காயம் ஏற்பட்டு ரத்தம் சிதறியது. அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

இச்சம்பவம் ராஜஸ்தானின் பிகானேரில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், கணவரிடம் உணவு சாப்பிடுங்கள் என மனைவி கூரியுள்ளார். ஆனால் அவர் சாப்பிடாமல் தூங்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்து கணவரை தாக்கி உள்ளார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றி உள்ளனர். அந்த சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BKS (@memes.bks)

மேலும் படிக்க: ஆசையாய் வந்த கணவன், வெச்சி செஞ்ச மனைவி: வைரல் வீடியோ

உள்ளூர் ஊடகங்களின்படி, இந்த விஷயம் பிகானேரின் ரித்மல்சார் கிராமத்தில் உள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூறியதாவது, தம்பதி இடையே தினமும் தகராறு ஏற்படுவது வழக்கம். அதேபோல அன்றும் வழக்கம் போல சண்டை தான் என முதலில் அக்கம்பக்கத்தினர் அலட்சியப்படுத்தி உள்ளனர். ஆனால் கணவரின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். இன்ஸ்டாகிராமில் உள்ள memes.bks என்ற பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: ரோஜா கொடுத்து ப்ரபோஸ் செய்த முதியவர்: இணையத்தை இளக வைத்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News