கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து மாதம் தோறும் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. சரியாக கடந்த 17 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு எல்.ஜி.ஜி விலை ரூ. 76.5 உயர்ந்துள்ளது.
அதை தொடர்ந்து, எல்லா மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை லிட்டருக்கு ரூ .4.50 ஆக உயர்ந்தது. இது, நவம்பர் 1 ம் தேதி முதல் 495.69 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இப்படி மாதம் தோறும் விலை உயர்வதால் மக்கள் மிகவும் அதிகமாக அவதிப்பட்டார்கள். இதன் காரணமாக அடித்தட்டு மக்களும், மாத சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்தும் வீடுகளும் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். மேலும் இதன் காரணமாக மத்திய அரசுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.
இதனால் கடந்த அக்டோபர் மாதமே சிலிண்டர் விலையை உயர்த்தும் நடைமுறை மத்திய அரசால் திரும்பப்பெற முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்டையில், தற்போது மாதந்தோறும் சிலிண்டர் விலையை உயர்த்தும் நடைமுறை மத்திய அரசால் திரும்பப்பெறப்பட்டு இருக்கிறது. இதன்படி சரியாக எல்லா மாதமும் ரூபாய் 2 விலை உயர்ந்தது. பின் 2017 ஜூலையில் இருந்து 4 ரூபாய்யாக விலை உயர்த்த மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பிற்கு அடுத்து மத்திய அரசு இந்த நடைமுறையை திரும்ப பெற்று இருக்கிறது.
மேலும், இனி வரும் காலங்களில் மாதம்தோறும் விலை உயராமல் சந்தை மதிப்பை அடிப்படையாக வைத்து அவ்வப்போது மட்டுமே விலையில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.