ராஜஸ்தான் CM அசோக் கெலாட், துணை CM-ஆக சச்சின் பைலட் பதவியேற்பு...

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றனர்...

Last Updated : Dec 17, 2018, 11:51 AM IST
ராஜஸ்தான் CM அசோக் கெலாட், துணை CM-ஆக சச்சின் பைலட் பதவியேற்பு... title=

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றனர்...

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி வாகை சூடியது. நீண்ட இழுபறிக்கு பின்னர், மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை காங்கிரஸ் தேர்வு செய்து அறிவித்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி டெல்லியில் ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் யாரை நியமிக்கலாம் என்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருடன் ராகுல் காந்தி பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில முதலமைச்சரின் பெயர் முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சரின் பெயர் 4 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் தெரிவித்தனர். 

இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெல்லாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும், இன்று காலை 11 மணியளவில், ஜெயப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், 10 ஆயிரம் தொண்டர்கள் நீங்கலாக, முக்கிய விருந்தினர்கள், 2 ஆயிரம் பேர் வரையில் பங்கேற்றனர். 

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றனர். ஜெய்ப்பூரில் முதல்வர், துணை முதல்வருக்கு ஆளுநர் கல்யாண்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

 

Trending News