9 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு, 2 மாத காலமாக எந்தவொரு நினைவுமின்றிக் கோமா நிலையில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் சேட்டன் குமார் சீட்டா அதிலிருந்து மீண்டு வந்துள்ளதார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர், சேட்டன் குமார் சீட்டா. 2 மாதங்களுக்கு முன்னர் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 தோட்டா குண்டுகள் உடலில் பாய்ந்தன.
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த அன்று, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சீட்டா, பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று வீடு திரும்புகிறார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், கோமா நிலையில் இருந்த சீட்டா, தற்போது நினைவு திரும்பி சகஜமாகப் பேசுவது மருத்துவ உலகில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
45 வயதான சேட்டன் குமார் சீட்டாவின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் டெல்லியில் வசித்துவருகின்றனர். தலையில் குண்டடி பட்டதால், கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் சீட்டா குணமடைவார் என்றும் மத்திய ரிசர்வ் படை தெரிவித்துள்ளது.