வாக்காளர்களை கவர புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் மம்தா பானர்ஜி!

வரவிருக்கும் நகராட்சி தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை (மார்ச் 1) 'பங்களர் கோர்போ மம்தா' (வங்காளத்தின் பெருமை மம்தா) என்ற வெகுஜன திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

Last Updated : Mar 2, 2020, 04:16 PM IST
வாக்காளர்களை கவர புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளார் மம்தா பானர்ஜி! title=

வரவிருக்கும் நகராட்சி தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை (மார்ச் 1) 'பங்களர் கோர்போ மம்தா' (வங்காளத்தின் பெருமை மம்தா) என்ற வெகுஜன திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த புதிய வெகுஜன வெளியீட்டு பிரச்சாரம் 2011 முதல் மம்தா பானர்ஜி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலத்தில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தலுக்கான மூலோபாயத்தை தயாரிப்பதற்காக மார்ச் 2-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்க மைதானத்தில் கவுன்சிலர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டத்தை பானர்ஜி கூட்டியுள்ளார்.

இந்த திட்டத்தின் முதல் கட்ட முகாம் 75 நாட்களுக்கு நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 107 நகராட்சிகள் மற்றும் கொல்கத்தா மாநகராட்சி (KMC) தேர்தல்கள், 2021 மாநில தேர்தல்களுக்கு முன்னதான "மினி சட்டமன்றத் தேர்தல்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில், வங்காளத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிரதான சவாலாக பாஜக உருவெடுத்ததுடன், வட வங்காளம் மற்றும் தென் வங்காளத்தின் ஜங்கிள்மஹால் பகுதி முழுவதும் பரவியுள்ள அனைத்து மக்களவை இடங்களையும் வென்றது.

திரினாலும் காங்கிரஸ் வட்டாரங்களின்படி, மூன்று கட்டங்களாக 'திதி கே போலோ' முயற்சிக்கு பாரிய பதிலளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இது மக்கள் தங்கள் புகார்களை பானர்ஜிக்கு நேரடியாக தெரிவிக்க ஒரு தளத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

"திதி கே போலோ" பிரச்சாரத்தைப் போலவே, புதிய திட்டமும் வாக்கெடுப்பு மூலோபாய நிபுணர் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழு I-PAC ஆகியவற்றின் சிந்தனையாகும் என்று திரினாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை வாக்கெடுப்பு தலைகீழான பின்னர் திரினாலும் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு மூலோபாய நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் 2019 ஜூலை மாதம் மம்தா ஒரு ஹெல்ப்லைன் எண்ணையும் வலைத்தளத்தையும் வெளியிட்டார். இந்த திட்டத்தில் அதன் முதல் மாதத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்துள்ளதால் பெரும் வரவேற்பைப் பெற்றதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Trending News