BCCI: ரூ.3500 கோடி வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வாரியம்!

இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல் போட்டியின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூபாய் மூவாயிரத்து ஐநூறு கோடியை வருமான வரியாகக் கட்டியுள்ளது.

Last Updated : Feb 9, 2018, 09:15 AM IST
BCCI: ரூ.3500 கோடி வரி செலுத்திய இந்திய கிரிக்கெட் வாரியம்! title=

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் பி.சி.சி.ஐ கிரிக்கெட் வாரியம். ஐ.பி.எல் போட்டி ஆரம்பித்த பிறகு, பண மழை பெய்யத் துவங்கிவிட்டது. 

ஆரம்பத்தில் பி.சி.சி.ஐ-க்கு வருமான வரித்துறை வரிவிலக்கு அளித்து வந்தது. ஆனால், 2008-ல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அதை மாற்றிக்கொண்டது.

ஐ.பி.எல் கமர்சியல் போட்டி என்பதால் கண்டிப்பாக வருமான வரி கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, 2008-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, 3,500 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தி உள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை சுமார் ரூ.12 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending News