பசு பாதுகாப்பு பிரிவின் 24 மணிநேர தொடர் யாகம்!

இன்னும் 2 மாதங்களில் கர்நாட்டகா சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், பாஜக-வின் பசு பாதுகாப்பு பிரிவு 24 மணிநேர யாகம் ஒன்றை நடத்தினர்!

Updated: Feb 2, 2018, 07:38 PM IST
பசு பாதுகாப்பு பிரிவின் 24 மணிநேர தொடர் யாகம்!
Pic Courtesy: @ANI

இன்னும் 2 மாதங்களில் கர்நாட்டகா சட்டமன்ற தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், பாஜக-வின் பசு பாதுகாப்பு பிரிவு 24 மணிநேர யாகம் ஒன்றை நடத்தினர்!

பசுவினை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட இந்த அஸ்தமாயா யாகமானது, தெற்கு பெங்களூருவில் இன்று நடத்தப்பட்டது. இந்த யாகத்தினில் கர்நாடக மாநில பாஜக-வின் பெரும் புள்ளிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

பசு-விற்கு எதிராக நடக்கும் அதர்மங்களை எதிர்க்கவும், பசுக்களை பாதுகாக்கவும் இந்த யாகம் நடத்தப்படுவதாக ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 24 மணிநேர யாகமானது இன்று பிற்பகல் துவங்கி நாளை பிற்பகல் 3 மணி வரை நடைப்பெறுகிறது. 

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில், பசுக்களை பாதுகாக்கும் பொருட்டு மாநில முதல்வர் யோகி ஆதித்தனார் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்தது. உபி-யில் பாஜக அரசு நடைப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கர்நாடகா-வில் பாஜக சார்பில் பசுக்களை பாதுகாக்க ஓர் யாகம் நடைப்பெறுவது குறிப்பிடத்தக்கது!