ஜம்மு காஷ்மீரின் (Jammu Kashmir) பாராமுல்லா (Baramulla) மாவட்டத்தின் சொபோர் பகுதியில், பா.ஜ.க தலைவரும் (BJP Leader), முனிசிபல் கமிடியின் துணைத் தலைவருமான மெஹ்ராஜ் தின் மாலா (Mehraj Din Malla) இன்று காலை கடத்தப்பட்டார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்சியின் கடைமட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு முறையான பாதுகாப்பை அளிக்குமாறு கட்சியின் மற்றொரு தலைவரான மன்சூர் அஹமத் பட் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை (Amit Shah) கேட்டுக்கொண்டார்.
‘இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு கடைமட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு நான் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்’ என பட் தெரிவித்தார்.
அடையாளம் தெரியாத ஒருவரால் மேஹ்ராஜ் கடத்தப்பட்டார்.
காவல்துறை (Jammu Kashmir Police) தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளது என காஷ்மீரில் உள்ள பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சமீபத்தில்தான், ஜூலை 8 அன்று, பந்திபுராவில், பா.ஜ.க தலைவர் ஷேக் வசீம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரருடன் பயங்கரவாதிகளால் கொல்லபட்டார் என்பது நினைவிருக்கலாம்.
ஷேக் வசீம் பாரி, ஸ்ரீநகரிலிருந்து வடக்கில் 60 கி.மீ தொலைவில் உள்ள பந்திபூரா மாவட்டத்தின் முன்னாள் பா.ஜ.க தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள்ளேயே பா.ஜ.க-வின் மற்றொரு தலைவர் இப்போது அங்கு கடத்தப்பட்டிருப்பது பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மத்தியில் பெரும் பதட்டத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது.
ALSO READ: போலீஸ்காரரின் பெற்றோரை கடத்திய நக்சல்கள்: தேடுதல் தீவிரம்