Breaking: மங்களூரு அருகே படகு விபத்து: படகில் இருந்த தமிழக மீனவர்களின் நிலை என்ன?

 கர்நாடகாவின் பேய்பூர் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு விபத்துக்குள்ளானது. படகில் மொத்தம் 14 பேர் இருந்ததாகவும் அதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 13, 2021, 12:55 PM IST
  • கர்நாடகாவின் பேய்பூர் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு விபத்துக்குள்ளானது.
  • படகின் மீது கப்பல் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
  • படகில் இருந்த 14 பேரில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Breaking: மங்களூரு அருகே படகு விபத்து: படகில் இருந்த தமிழக மீனவர்களின் நிலை என்ன?

கோழிக்கோடு: கர்நாடகாவின் பேய்பூர் பகுதியில் மீன் பிடிக்கச்சென்ற ஒரு படகின் மீது கப்பல் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர். 5 பேரைக் காணவில்லை.

மங்களூரு கடற்கரையில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகின்றது. படகில் மொத்தம் 14 பேர் இருந்ததாகவும் அதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கப்பல் படகை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இருவர் இறந்தனர். ஏழு பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், ஐந்து பேரைக் காணவில்லை என மங்களூரு கடற்கரை காவல் படை தெரிவித்துள்ளது. 

கப்பல் படகை மோதியதன் காரணமாக நிலைகுலைந்த கப்பல், விபத்துக்கொள்ளானது. விபத்து நடந்தபோது பேப்பூரில் இந்த குழு மீன்பிடித்துக் கொண்டிருந்தது. இந்த விபத்து மங்களூர் கடற்கரையில் நடந்துள்ளது. மொத்தம் 14 பேர் கப்பலில் இருந்தனர்.

விபத்து குறித்த மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News