மத்திய பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததை அடுத்து, நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது 4_வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று காலை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர், மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
சுமார் கிட்டத்தட்ட 2 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. முதல் முறையாக பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஒன்றிணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் வாசிப்பு முடிந்தவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.