2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த 4வது காலாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள IDBI வங்கியின் பங்குகளை LIC வாங்குதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் IDBI வங்கியின் 51% பங்குகளை LIC வாங்கி கொள்ள LIC -யின் ஆணையக் குழு சமீபத்தில் வழங்கியிருந்தது. ஏற்கனவே LIC-யின் வசம் IDBI வங்கியின் 8% பங்குகள் இருப்பதால் கூடுதலாக 43% பங்குகளை வாங்குவதன் மூலம் மொத்தம் 51% பங்குகளை LIC கைப்பற்றவுள்ளது. தற்போது இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு எந்த பணமும் கிடைக்கவிட்டாலும், IDBI வங்கிக்கு , பங்குகளின் விலையை பொறுத்து 13 ஆயிரம் கோடி நிதி ஆதாரமாக கிடைக்கும் என தெரிகிறது.