Aadhaar Card Photo Update or Change: இந்திய குடிமக்களின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் இந்த 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டையில் தனிநபரது புகைப்படம், முகவரி என தனிப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும். பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டையில் சில முக்கியமான அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம். ஆதார் அட்டையில் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் பிடித்தமானதாக இல்லை என்றாலோ, அல்லது பல ஆண்டுகளாகி விட்ட நிலையில், சமீபத்திய புகைபடத்தை அதில் வைக்க நினைத்தாலோ, அதிலுள்ள புகைப்படத்தை மாற்றலாம்.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்ற வேண்டுமானால், அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI மூலம் இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டையில் ஆதார் அட்டைதாரரின் பெயர், பிறந்த தேதி, தந்தை/கணவரின் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற பல்வேறு பயோமெட்ரிக் மற்றும் பிற தகவல்களைக் கொண்டுள்ளது. நமது பல அன்றாட வேலைகளுக்கு ஆதார் முக்கியம். பள்ளியில், கல்லூரியில், வேலையில் சேர்வது முதல், வங்கியில் கணக்கு தொடங்க வேண்டுமா அல்லது கடன் வாங்க வேண்டுமா அல்லது சிம் கார்டு பெற வேண்டுமா என அனைத்து பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை மாற்ற விரும்பினால், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், இதற்கான விதிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் ஆதார் அட்டையின் புகைப்படத்தை மாற்ற UIDAI விதிகள் அனுமதிக்கிறது. இந்த வேலை ஆதார் மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சிறிதளவு கட்டணம் செலுத்த வேண்டும்.
1. உங்களின் ஆதார் அட்டையின் புகைப்படத்தை மாற்ற விரும்பினால் அல்லது அப்டேட் செய்ய விரும்பினால், இதற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு செல்வதன் மூலம், அட்டையில் திருத்தம் செய்வதற்கான படிவத்தை அங்கிருந்துபெற்றுக் கொண்டு அதனை நிரப்ப வேண்டும்.இந்தப் படிவத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண், முழுப் பெயர் போன்றவற்றை உள்ளடக்கிய உங்களின் தகவல்களை நிரப்ப வேண்டும்.
2. நீங்கள் புதுப்பிக்க வேண்டிய தகவலை படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் படிவத்தை எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் முறைக்காக காத்திருக்க வேண்டும். உங்கள் முறை வரும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் படிவத்தைக் கொடுக்க வேண்டும். உங்கள் ஆதார் எண் அதிகாரியால் கணினியில் உள்ளிடப்பட்ட பிறகு உங்கள் அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
3. பிறகு உங்கள் பயோமெட்ரிக்ஸ் எடுக்கப்பட்டு, உங்கள் புகைப்படம் கிளிக் செய்யப்படும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை நீங்கள் புதுப்பித்துள்ளீர்கள் என்று ஒரு ரசீதும் உங்களுக்கு வழங்கப்படும். சில நாட்களில் உங்கள் ஆதார் அட்டையில் புதிய புகைப்படம் புதுப்பிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ