மத்திய அரசின் அக்னிபாத் திட்டம்: தகுதி, சம்பளம், இழப்பீடு விளக்கம்

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jun 14, 2022, 06:26 PM IST
  • வீரருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்கு ரூ. 48 லட்சம் வரையிலான இழப்பீடு அளிக்கப்படும்
  • 20 சதவீதம் பணியாளர்கள் ராணுவத்திலுள்ள கிளை வேலை வாய்ப்புகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம்: தகுதி, சம்பளம், இழப்பீடு விளக்கம் title=

அக்னிபாத் திட்டம் மூலம் இந்தியாவின் மொத்த ராணுவ வீரர்களின் பணி நியமனத்தில் 25% பேரை ஒப்பந்த முறையில் மத்திய அரசு மணியமர்த்த உள்ளது. இதன் மூலம் மூப்படையிலும் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தோடு, காப்பீடு, தங்குமிடம், உணவு என அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.

Agnipath Salary

பொதுவாக ராணுவ வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து மரியாதைகளும், சலுகைகளும் இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கும் கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

பணியில் இருக்கும்வரை 4 ஆண்டுகளும் தடையில்லாமல் சம்பளம் கிடைக்கும் என்றும், 4 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட மாதத்தவனையான பணத்தை முழு தொகையோடு வட்டியையும் சேர்த்து அளிப்பதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | Bitcoin Crash: படு வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி, அச்சத்தில் முதலீட்டாளர்கள்

Agnipath 1

4 ஆண்டு ஒப்பந்த பணிக்கு பிறகு 80% வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மேலும், 20 சதவீதம் பணியாளர்கள் ராணுவத்திலுள்ள கிளை வேலை வாய்ப்புகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். வீரர்கள் விரும்பும் பட்சத்தில் முழு நேர ராணுவ வீரர்கள் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Agnipath 2

பணியில் உள்ளவரை இவர்களை அக்னி வீரர்கள் என்று அழைப்பதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் பணியின்போது வீரருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்கு ரூ. 48 லட்சம் வரையிலான உயிர் காப்பீட்டு திட்டம் அளிக்கப்படும் என்றும். 

பணியின் இடையில் உயிரிழக்க நேரிடும்போது காப்பீடு மற்றும் 4 ஆண்டுக்கான முழு சம்பளமும் வீரரின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Agnipath 3

மேலும் படிக்க | Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News