கிழக்கு கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஹெலிகாப்படர் உதவியோடு ஆய்வு மேற்கொண்டார்!
ஆந்திரா, தொலுங்கான மாநில கரையோர பகுதிகளிலும், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி வரும் மக்களை மீட்க 3 தேசிய பேரிடர் மீட்பு குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு ரூ.200 கோடி நிவராண நிதியாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். 948 மீட்பு படை வீரர்களின் உதவியோடு இதுவரை 1250 பேர் மீட்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#AndhraPradesh: Cheif Minister N. Chandrababu Naidu conducts ariel survey of flood affected areas of East Godavari district. pic.twitter.com/aK9fvKNAPA
— ANI (@ANI) August 22, 2018
இதேப்போல் ஆந்திராவின் 28 கிராமங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் 2982 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு கிழங்கு கோதாவிரியிலும், 6336 பேர் மேற்கு கோதாவிரியிலும் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்!