புதுடெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்.
தற்போது 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை இருந்துள்ளது. இந்த முறையை மாற்றி 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சியாக்குவதற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 16-வது பிரிவில் திருத்தம் செய்யவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய எந்த மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.