தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து TJS விலகல்?

எதிர்வரும் தெலங்கானா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து தெலங்கானா ஜன சமித்தி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 16, 2018, 07:23 PM IST
தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து TJS விலகல்? title=

எதிர்வரும் தெலங்கானா தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து தெலங்கானா ஜன சமித்தி விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7-ஆம் நாள் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இத்தேர்தலில் ஆட்சியை பிடிக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் காங்கிரஸின் மகா கூட்டணியில் இருந்து M கோதண்டராமனின் தெலங்கானா ஜன சமிதி விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. இக்கட்சியின் கோரிக்கையின் படி காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்கவில்லை என்ற காரணத்தினால் கூட்டணியில் இருந்து தெலங்கானா ஜன சமிதி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் - 94 இடங்களிலும், தெலுங்கு தேச கட்சி - 14, தெலங்கான ஜன சமிதி - 8, CPI -3 இடங்களிலும் போட்டியிடும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தெலங்கான ஜன சமிதி தங்களுக்கு 12 இடம் வேண்டுமென கேட்டதாகவும், பின்னர் காங்கிரஸ் தனது ஜனகோனா தொகுதியினை விட்டுகொடுத்து தெலங்கான ஜன சமிதி-க்கு 9 தொகுதிகள் அளித்ததாகவும் தெரிகிறது. 

எனினும் தனது கோரிக்கையினை முழுமையாக காங்கிரஸ் ஏற்காத நிலையில் தற்போது தெலங்கான ஜன சமிதி - 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என புரியாம் காங்கிரஸ் தரப்பினர் குழம்பி வருகின்றனர்.

இதனால் தெலங்கான ஜன சமிதி, காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து செயல்பட போகிறதா,. இல்லை தனித்து போட்டியிடப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னதாக இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னரே கூட்டணி பங்கீடு குறித்த இறுதி முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது.

தேர்தல் விவரம்...

  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 19-ம் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். 
  • நவம்பர் 20-ஆம் நாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 
  • நவம்பர் 22-ஆம் நாள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசிநாள்.
  • டிசம்பர் 7-ஆம் நாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
  • டிசம்பர் 11-ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

Trending News