புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஐஐடி டெல்லியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், மாணவர்கள் ஐ.ஐ.டி டெல்லியின் விடுதிகளில் நடனமாடி, 'ஜெய் கொரோனா' என்ற முழக்கங்களை எழுப்பினர்.
வியாழக்கிழமை இரவு, ஐ.ஐ.டி டெல்லி இயக்குனர் பேராசிரியர் வி. ராம் கோபால் ராவ், கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஐ.ஐ.டி தேர்வு, வகுப்பு மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
In view of the COVID situation, IIT Delhi has decided to cancel all classes, examinations and public gatherings with immediate effect on the campus until March 31, 2020. Please inform all concerned.@iitdelhi@MHRD pic.twitter.com/PAqpSMkN5a
— V.Ramgopal Rao (@ramgopal_rao) March 12, 2020
தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன், மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியைக் காட்டினர். மாணவர்கள் இரவு முழுவதும் முழு ஹாஸ்டலிலும் நடனமாடி மகிழ்ச்சி அடைந்தனர். இது மட்டுமல்லாமல், மாணவர்கள் 'ஜெய் கொரோனா' என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.