டிசம்பர் 16 முதல் டெல்லியில் இலவச WiFi - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் தேசிய தலைநகரம் டெல்லியில் வைஃபை இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 4, 2019, 01:28 PM IST
டிசம்பர் 16 முதல் டெல்லியில் இலவச WiFi - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு title=

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் டிசம்பர் 16 முதல் ப்ரீ வைஃபை (Free WiFi) முழு நகரத்திலும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது இதை அறிவித்தார். முதல் கட்டமாக 22 லட்சம் பேர் ஒரே நேரத்தில் இலவச வைஃபை பயன்படுத்த முடியும் என்று கெஜ்ரிவால் கூறினார். மேலும் கூறுகையில், 'டெல்லி மக்களுக்கு இலவச வைஃபை எங்கள் அறிக்கையின் முக்கியமான வாக்குறுதியாக இருந்தது. டிஜிட்டல் யுகத்தில் குறைந்தபட்சம் இணைய இணைப்பு மற்றும் குறைந்த பட்ச தரவு பயன்பாடு எந்தவொரு மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டதாக உணர்கிறோம். நாங்கள் 200 யூனிட் மின்சாரத்தையும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீரையும் இலவசமாக்கியுள்ளோம். அதை மனதில் வைத்து, ஒரு அடிப்படை இணைய பயன்பாட்டையும் இலவசமகா வழங்கப் போகிறோம்.

இதை அளித்த வாக்குறுதிகளை அமல்படுத்திய பின்னர், எங்கள் அறிக்கையின் கடைசி வாக்குறுதிகளை நிறைவேற்றப்படுகிறது என்று டெல்லி முதல்வர் கூறினார். ஆம் ஆத்மி கட்சியின் அறிக்கைகள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய முதல் அரசாங்கமாக நாங்கள் இருப்போம் என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறினார்.

முதலமைச்சர் கூறுகையில், "11 ஆயிரம் ஹாட் ஸ்பாட்கள் (Hotspots) நிறுவப்பட்டு வருகின்றன, அவற்றில் 4 ஆயிரம் ஹாட் ஸ்பாட்கள் பஸ் ஸ்டாண்டில் (Bus Stops) நிறுவப்படும், 7 ஆயிரம் ஹாட் ஸ்பாட்கள் சந்தையில் )Markets) நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலவசமாக இன்டர்நெட் வழங்குவது மூலம் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் மாணவர்களுக்கு நிறைய உதவியாக இருக்கும். இன்று, தரவு மற்றும் தகவல்கள் ஒவ்வொரு துறையிலும் பயனடைகின்றன. 7 ஆயிரம் ஹாட் ஸ்பாட்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட பகுதியில் 100 ஹாட் ஸ்பாட்கள் என்ற அடிப்படையில் நிறுவப்படும். அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. முதலில் 100 ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்படும். இந்த இலவச வைஃபை டிசம்பர் 16 ஆம் தேதி முதல் அமல் செய்யப்படும். இதற்கான செலவு ரூ.100 கோடியை நெருங்கியுள்ளது. 

டிசம்பர் 16 அன்று, முதலில் 100 ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்படும். இதன் பின்னர், ஒவ்வொரு வாரமும் 500-500 என்ற விகதத்தில் அதிகரிக்கப்படும். டிசம்பர் 16-ல் 100, டிசம்பர் 23 அன்று 600 மற்றும் டிசம்பர் 30 அன்று 1100 என்ற முறையில், 6 மாதங்களில் 11000 ஹாட் ஸ்பாட்கள் நிறுவப்படும். இதன்பிறகு டெல்லியில் ஒவ்வொரு 500 மீட்டருக்குள் வைஃபை இணைப்பு கிடைக்கும். ஒவ்வொரு ஹாட் ஸ்பாட்டிலும் 100 மீட்டர் ரேன்ஜ் இருக்கும்.

ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு 15 ஜிபி தரவு இலவசமாக வழங்கப்படும். இந்த விகிதம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி இருக்கும். சராசரி வேகம் 100 எம்.பி.பி.எஸ். பல இடங்களில் 200 எம்.பி.பி.எஸ் வேகம் இருக்கும், 150-200 பேர் ஒரு நேரத்தில் ஒரே இடத்தில் இலவச WiFi -யை பயன்படுத்தலாம். மொத்தத்தில் 11 ஆயிரம் ஹாட் ஸ்பாட்களை நிறுவிய பின், 22 லட்சம் பயனர்கள் ஒரே நேரத்தில் இன்டர்நெட்டைப் பயன்படுத்த முடியும்.

இதற்காக ஒரு பயன்பாடு உருவாக்கப்பட்டது. விரைவில் பயன்பாடு குறித்து தகவல் வெளியிடப்படும். இந்த பயன்பாட்டின் அடிப்படியில் உங்கள் KYC விவரங்களை நிரப்பவும். உங்கள் தொலைபேசியில் ஒரு OTP வரும். அதை செலுத்தினால், உங்கள் இணைப்பு செயல்படும். ஒரு ஹாட் ஸ்பாட்டில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் போது உங்கள் இணைப்பு தடைபடாது. இது தானாகவே அடுத்த ஹாட் ஸ்பாட்டுடேன் இணைந்து விடும்.

Trending News