முதல்வர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி: தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் முதல்வர்

செவ்வாயன்று காலை வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். 1,761 பேர் தொற்றின் தாக்கத்தால் இறந்தனர்.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 20, 2021, 04:00 PM IST
  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் டெல்லி முதல்வர்.
  • டெல்லியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
முதல்வர் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி: தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் முதல்வர்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுனிதா கெஜ்ரிவால் தற்போது வீட்டில் தனிமையில் உள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கோவிட் -19 இன் (COVID-19) பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 19), செவ்வாய் முதல் ஆறு நாட்களுக்கு தேசிய தலைநகரில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவித்தார். ஏப்ரல் 19, திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் துவங்கிய முழு ஊரடங்கு, ஏப்ரல் 26 காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

ALSO READ: காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கொரானா தொற்று

டெல்லியில் தொடந்து சில நாட்களாக ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 25,462 என்ற ஒற்றை நாள் எண்ணிக்கையை டெல்லி பதிவு செய்த அடுத்த நாள் டெல்லி அரசு முழு ஊரடங்குக்கான (Lockdown) முடிவை எடுத்தது.

செவ்வாயன்று காலை வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை தரவுகளின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். 1,761 பேர் தொற்றின் தாக்கத்தால் இறந்தனர்.

கொரோனா வைரசின் (Coronavirus) இரண்டாவது அலை இந்தியாவை பாடாய் படுத்தி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

தற்போது பூதாகாரம் எடுத்து வரும் கொரோனா வைரசின் மாறுபட்ட வகை, பல வகைகளில் முந்தைய வகையை விட வேறுபட்டுள்ளது. இந்த வகையின் தீவிரம் மிக அதிகமாக உள்ளதாக மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்த மாறுய்பாட்டின் பரவும் விதமும் பாதிக்கும் விதமும் முந்தைய வைரசின் வகையை விட அதிகமாகவும் தீவிரமாகவும் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ALSO READ: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News