தேசிய தலைநகரில் கான் மார்க்கெட்டில் உள்ள லோக் நாயக் பவனில் அமைந்துள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைமையகத்தில் 5 அதிகாரிகளுக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த கட்டிடம் வெள்ளிக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு ஜூன் 7 வரை சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, அமலாக்க இயக்குநரக அதிகாரிகளின் சில குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களுக்கு இரவில் இலவச போலீஸ் டிராப் வசதியை அறிமுகம் செய்தார் பஞ்சாப் CM!
டெல்லியில் இதுவரை 26,334 COVID-19 நேர்மறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஜூன் 6 தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,887 புதிய நேர்மறையான வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் COVID-19 எண்ணிக்கை 2,36,657-ஐத் தொட்டது, இதனால் இத்தாலியின் சமீபத்திய எண்ணிக்கை 2.34 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுகளை இந்தியா பதிவு செய்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை மே 4 ஆம் தேதி வரை விசாரிக்க அவகாசம் அளித்த டெல்லி நீதிமன்றம்...
இதன் மூலம், இந்தியா இப்போது வைரஸின் அதிக தொற்றுகளை பதிவு செய்த நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.
இந்த பட்டியிலில் (இன்று 11:28AM நேரப்படி) அமெரிக்க 19,35,432 தொற்றுகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பிரேசில் (6,46,006 தொற்றுகள்), ரஸ்யா (4,49,834 தொற்றுகள்), ஸ்பெயின் (2,88,058 தொற்றுகள்), இங்கிலாந்து (2, 83,311 தொற்றுகள்) என இந்தியாவிற்கு முன் உள்ளன.