Manish Sisodia Bail: டெல்லியில் மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிஷ் சிசோடியா கடந்த ஒரு வருடமாக சிறையில் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. தற்போது மணிஷ் சிசோடியா தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தனது உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். அவரது உறவினருக்கு பிப்ரவரி 14 ஆம் தேதி லக்னோவில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள மணிஷ் சிசோடியா வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் கோரி இருந்தார். ஆனால் மூன்று நாட்களுக்கு மட்டுமே ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.
டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, இப்போது டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் பிப்ரவரி 13 ஆம் தேதி மாலை 5 மணி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை வெளியில் இருப்பார். மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, சிறைக்கு வெளியே கழிக்கும் முதல் இரவு இதுவாகும். சிசோடியா கடந்த ஓராண்டாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பலமுறை நிராகரிக்கப்பட்டு உள்ளன. தனது நோய்வாய்ப்பட்ட மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - Arvind Kejriwal: என்னை பயங்கரவாதி போல் பாஜக நடத்துகிறார்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
மணிஷ் சிசோடியாவின் ஜாமீனுக்கு சிபிஐ தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், மணீஷ் சிசோடியா செல்வாக்கு மிக்கவர். அவர் உயர் மற்றும் சக்திவாய்ந்த முக்கிய பதவிகளில் இருந்தவர். எனவே ஆதாரங்களை சிதைக்க முடியும். திருமணத்தில் கலந்து கொள்ள ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என வாதிட்டனர்.
மணிஷ் சிசோடியாவுடன் போலீஸ் அதிகாரிகளை அனுப்பலாமா என்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மணிஷ் சிசோடியா தரப்பு வழக்கறிஞர், காவல்துறையை அனுப்பி குடும்பத்தை அவமானப்படுத்தாதீர்கள். அது சூழலை கெடுக்கும். மூன்று நாட்களுக்கு மட்டும் ஜாமீன் கொடுத்தாலும் போலீசாரை உடன் அனுப்பக்கூடாது எனக் கோரிக்கை வைத்தார்.
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு ஆணையம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் மணிஷ் சிசோடியாவை பிப்ரவரி 2023 கடைசி வாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தது.
மேலும் படிக்க - மனீஷ் சிசோடியா ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக கூட பாஜகவால் நிரூபிக்கமுடியாது: AAP சவால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ