கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பீடு என்று தெரியவந்து உள்ளது. 3 லட்சம் பயணிகளை மெட்ரோ ரயில் இழந்து உள்ளது என்றும் ஆர்டிஐ தகலில் தெரியவந்து உள்ளது.
மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தியதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்த போது, இழப்பை ஏற்க டெல்லி அரசு தயாரா என மத்திய அரசு தரப்பில் கேள்வி எழுப்பட்டது.
இப்போது 50% அளவிலான கட்டண உயர்வினால் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு நாளில் 3 லட்சம் பயணிகளை இழந்து உள்ளது என தெரியவந்து உள்ளது.