விவாகரத்து வேண்டி மனைவிக்கு HIV ஊசி போட்ட மருத்துவர்...

புனே நகரத்தே சேர்ந இளம்பெண் ஒருவர், விவாகரத்து வேண்டி தனது கணவர் தனக்கு HIV ஊசி போட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்!

Last Updated : Dec 1, 2018, 10:46 AM IST
விவாகரத்து வேண்டி மனைவிக்கு HIV ஊசி போட்ட மருத்துவர்... title=

புனே நகரத்தே சேர்ந இளம்பெண் ஒருவர், விவாகரத்து வேண்டி தனது கணவர் தனக்கு HIV ஊசி போட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்!

பிம்ப்ரி-சின்சவாட் பகுதியில் உள்ள பிம்ப்ளே சவுத்கர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது இளம்பெண் சாரா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தன் கணவர், அவரது குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாகவும், நீதிமன்றத்தில் விவாகரத்தினை பெற தனக்கு HIV ஊசியினை செலுத்தியுள்ளனர் எனவும் புகார் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல், 2015-ஆம் ஆண்டு சாராவிற்கு திருமணம் நடைப்பெற்றது அந்நாள் முதல் வரதட்சணை கோரி அவரது கணவர் குடும்பத்தார் கொடுமை செய்துவந்துள்ளனர். குளோபல் மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வரும் அவரது கணவரும் இதற்கு உடந்தாயக இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாரா மருத்து பரிசோதனை ஒன்றினே மேற்கொண்ட போது தனக்கு HIV இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனக்கு தன் கணவர் மூலம் தான் HIV பரவியிருக்கும், தன்னை விவாகரத்து செய்ய தனக்கு HIVஊசியினை அவர் செலுத்தியிருக்க கூடுமென காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகரை ஏற்றுக்கொண்ட மூத்த காவலர் சதீஷ் மானே இதுதொடர்பாக மருத்துவர் உதவியினை நாடியுள்ளார். பாதிக்கப்ட்ட சாராவிற்கு உடல் ரீதியாக HIV பரவியுள்ளாதா, இல்லை ஊசி மூலம் பரவியுள்ளதாக என கண்டறியுமாறு கோரியுள்ளார். மேலும் சாராவின் ரத்த மாதிரி கொண்டு அவருக்கு எத்தனை நாட்களாக HIV உள்ளது என்ற தகவலையும் மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

இந்த புகாரின் மீதான விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சாரா கணவரை காவல்துறையினர் விசாரணைக்கு தேவையான பத்திரங்களுடன் நேரில் வந்து சந்திக்குமாறு தெரியப்படுத்தியுள்ளனர். 

கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிடி குற்றம்சாட்டப்பட்டுள்ள மருத்துவர் மீது சட்டபிரிவு 498(a) (கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தாக்குதல்), 323 (அத்துமீறி தாக்குதல்), 504 (பாதிக்கப்பட்டவரின் அமைதியை உருக்குலைக்கு வகையில் செயல்படல்), 506 (குற்றவியல் தாக்குதல்), 34 (பொதுவான எண்ணம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

Trending News