ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச MP-க்கள் பாராளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்!
கடந்த 2014-ல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, பிரிவினையின்போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது.
TDP MPs continue their protest in Parliament demanding special status for #AndhraPradesh. pic.twitter.com/lnFeJ1VpSO
— ANI (@ANI) July 30, 2018
அதன்படி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்து வந்தார், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
அதைத் தொடர்ந்து ஆந்திர கட்சித்தலைவர்கள் தொடர் போராட்டத்த்தில் ஈடுப்பபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லை தீர்மானத்தினையும் தெலுங்கு தேச கட்சி கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி MP-க்கள் பாராளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.