தேனா, விஜயா, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு

மூன்று பெரிய வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2018, 07:31 PM IST
தேனா, விஜயா, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு title=

தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மூன்று வங்கிகளும் இணைந்தால் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக மாறும் என்று நிதி அமைச்சகம் செயலாளர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

நிதி மந்திரி அருண் ஜேட்லி, இன்று டெல்லியில் செய்தி ஊடகத்திடம் பேசினார். வங்கிகளின் வரவு செலவு குறித்து ஆலோசனை செய்து வங்களின் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார். 

மேலும் வங்கிகளை இணைப்பதன் மூலம் "எந்த ஊழியருக்கும் பாதிப்பு இல்லை. அவர்களுக்கு வழங்கபட்டு வந்த சேவையில் எந்தவித மாற்றமும் இருக்காது. அவர்கள் எந்தவித பிரச்சனையும் சந்திக்க மாட்டார்" 

இந்த வங்கிகள் இணைப்பதன் மூலம் சிறந்த சேவைகள் வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

 

Trending News