மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பாஜக (BJP) மற்றும் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) அணி இணைந்து ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று இரவு சுமார் 7 மணி அளவில் முதல்வராக பதவியேற்கலாம் என்றும், அவருடன் ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வராக பதவியேற்கலாம் என்றும் கூறப்படுகிறது. 49 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே தன்னுடன் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் சேர்ந்து ராஜ்பவனுக்குச் சென்று ஆட்சி அமைக்கக்கோரிய கடிதத்தை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிடம் வழங்குவார் எனத் தெரிகிறது. நமக்கு கிடைத்த தகவலின்படி ஆதரவு கடிதத்துடன் ஷிண்டே மும்பை வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே கோவாவில் இருந்து மும்பை திரும்பியுள்ளதால், அவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருக்கு Z பிரிவு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) மகாராஷ்டிரா முதல்வராக ஜூலை 1 ஆம் தேதி பதவியேற்கலாம். மும்பையில் உள்ள ஃபட்னாவிஸின் இல்லமான சாகர் பங்களாவில் இன்று பாஜக தலைமைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஃபட்னாவிசும், ஏக்நாத் ஷிண்டேவும் முடிவு செய்வார்கள் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
பாஜக தரப்பில் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டிக்கு 13 அமைச்சர் பதவிகள் வழங்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 8 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் மாநில அமைச்சர்களாகவும் இருக்கலாம். ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை.
மேலும் படிக்க: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று நம்பர் ஒன் கட்சியாக இருந்தும், பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை மற்றும் தேவேந்திர ஃபட்னாவிசால் முதல்வராக முடியாமல் போனது. இதற்கு காரணம் ஒன்றாக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்ட பா.ஜ.க, - சிவசேனா கட்சிகளின் பாதை பிரிந்தது. சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காலத்தின் சுழற்சி மாறியது. அதில் உத்தவ் தாக்கரே தனது சொந்தக் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டார். மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி நழுவி போனது. யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இதற்கு காரணம் ஏக்நாத் ஷிண்டே என்றும், இந்த மாற்றத்தின் பின்னணியில் அவர் தான் ஹீரோ என்று பல ஊடகங்கள் சொன்னாலும், இந்த கதைக்கு உண்மையான திரைக்கதையை எழுதியவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
1 வருடத்திற்கு முன்பிருந்தே ஆபரேஷன் கமல் 2.0 திட்டத்திற்கான வேலைகளை ஃபட்னாவிஸ் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஆட்சியில் இருக்கும் சிவசேனா அதைக் கூட கவனிக்கவில்லை. தற்போது மகாராஷ்டிரா அரசியலின் "புதிய மாஸ்டர்" என்பதை தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) நிரூபித்துள்ளார்,
மேலும் படிக்க: நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் - பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: ஏக்நாத் ஷிண்டே
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR