விமானத்தில் ஃபோட்டோ வீடியோ எடுக்க தடை இல்லை: DGCA விளக்கம்..!!!

விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 13, 2020, 10:39 PM IST
  • விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை என விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.
விமானத்தில் ஃபோட்டோ வீடியோ எடுக்க தடை இல்லை: DGCA விளக்கம்..!!!

சமீபத்தில் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட விமானத்தின் வழித்தடத்தில், விமான சேவைகள் இரு வார காலத்திற்குக் நிறுத்தி வைக்கப்படும் என விமான போக்குவரத்து துறையில் நிர்வாக இயக்குநர் (DGCA) உத்தரவு பிறப்பித்திருந்தார். 

மேலும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட பிறகு தான் விமான சேவை தொடரும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரு நாட்களுக்கு முன், நடிகை கங்கனா ரனாவத் பயணம் செய்த, சண்டிகரில் இருந்து முன்பை வந்த இண்டிகோ விமானத்தில், போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு இண்டிகோ நிறுவனத்திடம் விமான போக்குவரத்து துறை கோரியது.

அப்போது,  போட்டோ மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட போது, அங்கே பெரும் கூச்சலும் குழப்பமும் காணப்பட்டதோடு, போட்டோ எடுக்கவும் வீடியோ எடுக்கவும் அனைவரும் முண்டியடித்து கொண்டு சென்றதை காண முடிந்தது.

மேலும் படிக்க | கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!

இதையடுத்து, விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்கப்பட்டால், அந்த குறிப்பிட்ட விமானத்தின் வழித்தடத்தில், விமான சேவைகள் இரு வார காலத்திற்குக் நிறுத்தி வைக்கப்படும் என விமான போக்குவரத்து துறையில் நிர்வாக இயக்குநர் (DGCA) உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இது தொடர்பாக விளக்கம் அளித்த போது, விமானத்தில் பயணம் செய்பவர்கள் விமானத்தில் ஃபோட்டோ அல்லது வீடியோ எடுக்க தடை இல்லை எனவும் ஆனால், அது பாதுகாப்பை மீறூவதாகவோ, குழப்பத்தை உருவாக்குவதாகவோ, அல்லது விதிகளை மீறும் செயலாகவோ இருக்ககூடாது எனவும், அச்சமபவம் விதிமுறைகளை மீறுவதாக இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விமான போக்குவரத்து துறையின் நிர்வாக இயக்குநர் (DGCA) தெளிவுபடுத்தினார்.

விமானத்தில் டேக் ஆஃப் அல்லது லாண்டிங்கை எடுக்க விரும்பும் விமான பயணிகள் அதை புகைப்படமோ விடியோவோ எடுக்கலாம் எனவும் அவர் தெளிவு படுத்தினார்.

மேலும் படிக்க | எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. கடும் குளிர் காலத்திற்கு தயாராகும் துருப்புகள்..!!!

More Stories

Trending News