காஷ்மீரின் உண்மை நிலவரம் அறியாமல் மலேசியா, துருக்கி நாடுகள் பேச வேண்டாம்: MEA

காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 4, 2019, 08:07 PM IST
காஷ்மீரின் உண்மை நிலவரம் அறியாமல் மலேசியா, துருக்கி நாடுகள் பேச வேண்டாம்: MEA title=

புதுடெல்லி: ஐ.நாவில் துருக்கி (Turkey) மற்றும் மலேசியா  (Malaysia) எழுப்பிய காஷ்மீர் பிரச்சினைக்கு (Kashmir issue) இந்தியா (India) இன்று (வெள்ளிக்கிழமை) இருநாடுகளுக்கும் கடுமையாக எச்சரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் காஷ்மீர் குறித்து பதில் அளித்துள்ளது. அதாவது இது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம் என்றும், இந்த பிரச்சினையில் தேவையற்ற விவகாரத்தை செய்ய வேண்டாம் என்றும் இந்தியா தெளிவாகக் கூறியுள்ளது. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாக இந்த நாடுகளும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். காஷ்மீர் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்விவகார  பிரச்சினை என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் குறித்த துருக்கியின் அறிக்கை குறித்து பேசிய ரவீஷ்குமார், "ஆகஸ்ட் 6 முதல் துருக்கி மீண்டும் மீண்டும் இந்தியாவின் உள் விவகாரம் தொடர்பான ஒரு பிரச்சினையில் பல அறிக்கைகளை வெளியிட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த அறிக்கைகளில் கூறப்பட்டு இருப்பது உண்மை அல்ல. காஷ்மீர் குறித்து உண்மையான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதன் பின்னர் துருக்கியி அறிக்கைகளை வெளியிடவேண்டும் எனக்கூறினார்.

காஷ்மீர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கும் மலேசியாவுக்கும் இந்தியா சரியான பதிலை அளித்துள்ளது. "நாங்கள் பாரம்பரியமாக மலேசியாவுடன் நல்ல நட்பு மற்றும் உறவைக் கொண்டிருகிறோம். ஆனால் மலேசியாவின் பிரதமர் அளித்த அறிக்கையால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். அவருடைய அறிக்கைகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல" என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறினார். 

மேலும் அவர் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, இந்தியாவுடன் இணைவதை முழுமையாக ஏற்றுக்கொண்டது. ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. மலேசிய அரசாங்கம் இரு நாடுகளின் உறவையும் மனதில் கொள்ள வேண்டும். காஷ்மீர் குறித்து பொய்யான அறிக்கைகளை கூறுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையில், காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளும் பாகிஸ்தானை ஆதரித்தன என்பதையும் உங்களுக்கு சொல்கிறேன் என்றும் கூறினார். 

இம்ரான் கான் குறித்து பேசுகையில், பாகிஸ்தான் பிரதமர் மக்கள் கட்டுப்பாட்டு எல்லை (LOC) நோக்கி செல்லுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் கூட அவர் ஆத்திரமூட்டும் மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டார். சர்வதேச உறவுகளை மேற்கொள்வது என்று அவருக்கு இன்னும் தெரியவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். மிகவும் பொறுப்பற்ற விஷயம் என்னவென்றால், இந்தியாவுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனப்படுத்தியுள்ளனர். இது சாதாரண விசியம் அல்ல" எனவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் கூறினார்.

Trending News