நம்பத்தகாத கருத்துகணிப்பு பாஜக-வின் மற்றொரு பால்காட் தாக்குதல் என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்!
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 19-ஆம் நாள் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் பாஜக-வின் பால்காட் தாக்குதல் போன்று சித்து விளையாட்டு எனவும், இந்த போலி கருத்துகணிப்புகளை பயன்படுத்தி பாஜக வாக்கு இயந்திரத்தை மாற்ற செயல்பட்டு வருகிறது எனவும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. வெளியான கருத்துகணிப்புகளின் படி மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் நாள் நடைப்பெற்றது. தேர்தல் நடந்து முடிந்த 38 தொகுதிகளில் பாஜக-ஆதிமுக கூட்டணிக்கு 6 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 31 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்த முள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11 துவங்கி மே 6 வரை 5 கட்டங்களாக வாக்கப்பதிவு நடைப்பெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின் படி இங்கு பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், நேஷ்னல் கான்பிரஸ் கட்சி 3 இடங்களையும் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகணிப்பு குறித்து குற்றம் சாட்டி வரும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.