மஹாராஷ்டிராவில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்த்தால், பொதுமக்கள் பீதி!!
மஹாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 11 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு சாலையில் தஞ்சமடைந்தனர். அதுமட்டுமின்றி சாலையில், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதமோ இல்லது உயிர் சேதம் பற்றிய சரியான தகவல்கள் வெளியாகவில்லை. அங்கு ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால், சற்று நேரம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Earthquake with a magnitude of 4.3 on the Richter scale hit Palghar district of Maharashtra at 11 am today.
— ANI (@ANI) March 1, 2019