கங்கை நதிக்கரையில் பிணங்கள், புதிய நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் கங்கை ஆற்றில் பாயும் சடலங்கள் குறித்து விசாரணை நடத்த டி.எம் உத்தரவிட்டுள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2021, 11:55 AM IST
கங்கை நதிக்கரையில் பிணங்கள், புதிய நடவடிக்கை ஆரம்பம்! title=

காசிப்பூர் (உத்தரபிரதேசம்): கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் பாயும் கங்கை நதிகளின் மிதக்கும் சடலங்கள் குறித்து விசாரணைக்கு மாவட்ட நீதவான் உத்தரவிட்டார். கங்கை ஆற்றில் இறந்த உடலைப் பார்த்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ரோந்து குழுவை அமைத்துள்ளோம், தகனம் செய்ய மக்களை எச்சரிக்கிறோம் என்று டி.எம் எம்.பி. சிங் கூறினார்.

 கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வரும் நிலையில், எத்தனை உடல்கல் இவ்வாறு ஒதுங்கின என்பதை பற்றி மாவட்ட நிர்வாகம் வாய்திறக்காமல் மவுனம் காக்கிறது. ஆனால் உடல்களுக்கான இறுதிச் சடங்குகள் போலீஸ் முன்னிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்தியதாக நிர்வாகம் தெரிவித்தது.

ALSO READ | அதிகரிக்கும் Mucormycosis நோயாளிகள்: 50% இறப்பு விகிதத்துடன் தயாராகிறது அடுத்த நோய்!!

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான உடல்கள் உபி.யிலிருந்து (UTTAR PRADESH) பீகார்  கங்கையில் (Ganga) உடல்கள் மீட்கப்பட்டன, இவற்றில் பெரும்பாலான உடல்களை ஒரே குழியில் போட்டு எரித்ததும் நடந்தது. இன்னும் இந்த உடல்கள் எங்கிருந்து வந்தன, யார் இதன் உறவினர்கள், கோவிட் மரணமா என்பதெல்லாம் கண்டுப்பிடிக்க முடியாமல் உ.பி.நிர்வாகம் திணறி வருகிறது.

செவ்வாயன்று காஜிப்பூரில் 24 உடல்கள் கங்கையில் மிதந்தன. இதுவரை இந்த உடல்கள் எங்கிருந்து வந்தன், யாருடையது, கொரோனா நோயினால் இறந்தவர்களா என்று எதையும் கண்டுப்பிடிக்க முடியாமல் உ.பி. நிர்வாகம் திணறுகிறது. இத்தனைக்கும் கங்கைநதியின் இருகரைகளிலும் கடும் கண்காணிப்புப் போடப்பட்டுள்ளதாக மாவட்ட மேஜிஸ்ட்ரேட் தெரிவித்துள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News