HDFC Bank Credit Card: 20000-க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பம்புகளில் இலவச பெட்ரோல்

Free Fuel In Indian Oil: நல்ல செய்தி! 20000க்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகளில் இலவச பெட்ரோல் கிடைக்கும். அதன் முழு விவரம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 21, 2022, 10:58 AM IST
  • ஒவ்வொரு ஆண்டும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாகப் பெறலாம்.
  • IndianOil HDFC Bank Credit Card பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல் இலவசம்.
  • 20,000க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்புகளில் இலவச எரிபொருள் பெறலாம்.
HDFC Bank Credit Card: 20000-க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பம்புகளில் இலவச பெட்ரோல் title=

இலவச பெட்ரோலைப் பெறுவது எப்படி: எந்த ஒரு பொருளும் இலவசமாகக் கிடைக்காது. அதற்கான ஒரு விலை கட்டாயம் இருக்கும். அதுவும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை உயர்ந்துள்ள பெட்ரோல் இலவசமாக கிடைக்கும் என்றால், நம்பும்படி இல்லை என்று தானே நினைக்கிறீர்கள். ஆம். அது உண்மை தான். ஒவ்வொரு ஆண்டும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாகப் பெற ஒரு வழி உள்ளது. ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலைப் பெறலாம். நாட்டில் சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது? என்பதைக் குறித்து விரிவாக பார்ப்போம்.

எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த இரு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் IndianOil HDFC Bank Credit Card அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வெகுமதி அடிப்படையிலான கிரெடிட் கார்டு என்றாலும் நீங்கள் ஒவ்வொரு முறையும் கார்டை பயன்படுத்தி செலவழிக்கும் போது வெகுமதி புள்ளிகளைப் பெறுவீர்கள். நீங்கள் பெறும் எரிபொருள் புள்ளிகளுக்கு ஏற்ப மீண்டும் எண்ணெய் வாங்கலாம். கார்டுதாரருக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அதிகபட்ச எரிபொருள் புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 50 லிட்டர் வரை இலவச பெட்ரோலை பெற முடியும். அதன் நன்மைகள் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

மேலும் படிக்க: இலவச அரிசி-கோதுமை வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்!

IndianOil HDFC Bank Credit Card அட்டையைப் பயன்படுத்தி ஒருவர் பெட்ரோல், டீசல், மளிகை பொருட்கள் மற்றும் பில் செலுத்தும் பணத்தில் 5% சேமிக்க முடியும். முதல் ஆறு மாதங்களில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 250 Fuel Points வரையிலும், அடுத்த ஆறு மாதங்களில் அதிகபட்சமாக 150 Fuel Points வரையிலும் சம்பாதிக்கலாம்.

-- மளிகைக் கடை மற்றும் பில் செலுத்தும் போது 5 சதவீத எரிபொருள் புள்ளிகள் கிடைக்கும். இரண்டிலும், ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 100-100 எரிபொருள் பாயிண்ட்ஸ் கிடைக்கும் இவற்றுக்கு குறைந்தபட்சம் ரூ.150 பரிவர்த்தனை இருக்க வேண்டும்.

-- எந்த வகையான ஷாப்பிங் செய்தாலும், குறைந்தது ரூ.150க்கு 1 எரிபொருள் புள்ளியைப் பெறுவீர்கள்.

-- மேலும், 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் தள்ளுபடி கிடைக்கும். இது ஒரு அறிக்கை சுழற்சியில் அதிகபட்சமாக ரூ.250 ஆக இருக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் ரூ.400 பரிவர்த்தனை இருக்க வேண்டும்.

- இந்த வெகுமதி புள்ளிகளை இந்திய எண்ணெய் பம்புகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இது துல்லியமான எரிபொருள் புள்ளிகளுக்கானது.

1 எரிபொருள் புள்ளி = INR 0.96 (எரிபொருள் வாங்க விரும்பினால்)
1 எரிபொருள் புள்ளி = INR 0.20 (ஒருவர் பணத்தை திரும்பப் பெற விரும்பினால்)
எரிபொருள் புள்ளிகள் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

-- இந்த எரிபொருள் புள்ளிகள் பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள 20,000க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்புகளில் இலவச எரிபொருளைப் பெறலாம். நீங்கள் அதிகபட்சமாக 50 லிட்டர் (ஒரு வருடத்தில்) வரை பெறலாம்.

மேலும் படிக்க: இரும்பு தகடு மூலம் ATM-லிருந்து பணத்தை திருடிய பலே திருடர்கள்! வளைத்து பிடித்த போலீஸார்!

குறிப்பு- இத்தகைய அட்டையை வாங்க நாங்கள் யாரையும் பரிந்துரைக்கவில்லை. இந்த செய்தி தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News