டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து ஆம் ஆத்மி MLA நீக்கப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான ஆதர்ஷ் சாஸ்திரி இன்று காங்கிரசில் இணைந்துள்ளார்.
டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ முன்னிலையில் ஆதர்ஷ் சாஸ்திரி காங்கிரசில் இணைந்தார். ஆதர்ஷ் சாஸ்திரி 2015-ல் 59.08 சதவீத வாக்குகளுடன் துவாரகா தொகுதியை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது எதிர்வரும் வரும் டெல்லி தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில்., காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான மகாபல் மிஸ்ராவின் மகனான வினய் குமார் மிஸ்ராவுக்கு அந்த இடத்திலிருந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாதக வினய் மிஸ்ரா திங்களன்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார், கட்சியில் இணைந்த அடுத்த நாள் (செவ்வாய் அன்று) அவருக்கு பிப்ரவரி 8 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை கட்சி வழங்கியது.
முன்னதாக, ஆதர்ஷ் சாஸ்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் IANS-ஸிடம், இந்த பட்டியல் தனக்கு ஒரு "ஆச்சரியமாக" வந்துள்ளது, ஏனெனில் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி பிரச்சாரத்தைத் தொடர வேண்டும் என்று கூறினார்.
"அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று அவருக்குக் கூறப்பட்டு, பின்னர் பட்டியிலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதாகவும்" அவர் குற்றம் சாட்டினார். மேலும், அவர் ஒரு "மாற்று கட்சியினருக்கு" வாய்ப்பளித்ததையும் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
MLA தான் இப்பகுதியை மாற்றியமைத்ததாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியில் கடுமையாக உழைத்ததாகவும் கூறினார். சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான 70 வேட்பாளர்களையும் கொண்ட பெயர் பட்டியலினை வெளியிட்டது. எனினும் காங்கிரஸ் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பெயரினை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது