குற்றவாளி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்: மோடி அரசை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக எங்கள் முதல்வர் ஒரு நாளின் 4 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்வார் என  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 30, 2018, 10:32 AM IST
குற்றவாளி விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்: மோடி அரசை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி!   title=

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக எங்கள் முதல்வர் ஒரு நாளின் 4 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்வார் என  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அங்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் தங்களது முதலமைச்சர் பணியாற்றுவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், தெலங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியும், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவும் வாக்குறுதிகளை அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றுவதில்லை என குற்றம்சாட்டினார். 

நாட்டில் பெரும் பணக்காரர்கள் வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக உள்ளதாகவும், ஆனால், ஏழை விவசாயிகளின் கடனைப் போக்க அவர் தயாராக இல்லை என்றும் ராகுல் விமர்சித்தார்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ராகுல்காந்தி உறுதி அளித்தார். மேலும், தெலுங்கானா வளர்ச்சி நிதியில் தனது குடும்பத்தை பணக்கார குடும்பமாக்க சந்திரசேகர ராவ் நினைக்கிறார். காங்.,ன் திட்டங்களை பெயர் மாற்றி தன்னுடையது என கூறிக் கொள்வதையே முக்கிய வேலையாக கொண்டுள்ளார் சந்திரசேகர ராவ். விரைவில் தெலுங்கானா பெயரையும் தெலுங்கானா ஆர்எஸ்எஸ் என மாற்றி விடுவார். 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக எங்கள் முதல்வர் ஒரு நாளின் 4 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்வார். நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் தொழிற்சாலைகள் திரும்ப வரும். விவசாயிகளிடமே அவர்களின் நிலம் திரும்பக் கொடுக்கப்படும் என்றார்.

 

Trending News