டெல்லிக்கு புறப்படும் ஏழு ரயில்கள் தாமதமாகிவிட்டன, மேலும் வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக இரண்டு ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வட மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் காட்சித் திறன் குறைந்து, டெல்லி நோக்கி வரும் ரயில்கள் சுமார் 6 மணி நேரம் வரை தாமதமாக ஓடுவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர். மேலும் இன்று அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதாலும், மற்றும் தண்டவாளம் சரியாக தெரியாத காரணத்தினாலும் ரயில்கள் வழக்கத்தைவிட மெதுவான வேகத்தில் இயங்கி வருவதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலையில் அடர் பனிமூட்டம் இருந்த நிலையில், சில இடங்களில் மழையும் பெய்தது. அதே சமயம் காற்றின் தரம் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிக்கிறது. மோசமான வானிலை காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகிவிட்டது என்று வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாகல்பூர்-ஆனந்த் விஹார் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமானது, பூரி-புது டெல்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 45 நிமிடங்கள் தாமதமானது, வாஸ்கோ-நிஜாமுதீன் கோவா எக்ஸ்பிரஸ் மூன்று மணி 15 நிமிடங்கள் தாமதமானது, வாரணாசி-புது டெல்லி காஷி விஸ்வநாத் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக, ரக்சால்- ஆனந்த் விஹார் சத்தியாக்கிரா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமானது, ஜெயநகர்-அமிர்தசரஸ் சரு யமுனா எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமானது.
மூடுபனி காரணமாக தாமதமாக இயங்கும் ரயில்களின் பட்டியல் இங்கே:-
டெல்லியில் தற்போதைய வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் ஆகும், ஓரளவு மேகமூட்டமான வானம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது மற்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.