மருத்துவ சிகிச்சைக்காக ஐதராபாத் நோக்கி விமானத்தில் வந்த 5-வயது சிறுமி வரும் வழியில் மரணம் அடைந்துள்ளார்!
ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் எடப்பள்ளி யஷ்வஷ்னி(5). குவைத்தில் வசித்து வரும் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 2 வார காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் தன் தாய் மற்றும் 2-வயது சகோதரனுடனும் Jazeera Airways விமானம் மார்கமாக குவைத்தில் இருந்து ஐதராபாத் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உடல்நலம் குறைவால் அவதிப்பட்டு வந்த யஷ்வஷ்னி-க்கு இந்த பயணத்தின் போது உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யஷ்வஷ்னி-யின் தாய் விமான அதிகாரிகளிடன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓமன் நாட்டில் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது, பின்னர் அருகில் உள்ள ராயல் மருத்துவமனைக்கு சிறுமி கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் யஷ்வஷ்னி இறந்துள்ளார். பலியான சிறுமியின் உடல் ஓமன் நகரில் இருந்து ஆந்திராவிற்கு கொண்டுவருவதற்கான சட்டரீதியான வேலைகள் மேற்கொண்டு பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மஸ்கட்டில் வசித்து வரும் சமூக ஆர்வளர் நல்லி ஹரிபாபு என்பவர், யஷ்வஷ்னி உடலினை தாய்நாட்டிற்கு கொண்டுவர தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது!