அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை, அமெரிக்காவிடம் இருந்து இந்திய விமானப் படை பெற்றுக் கொண்டது!!
இந்திய விமானப் படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக அமெரிக்காவிடம் இருந்து 22 அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு, 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரிசோனாவில் போயிங் உற்பத்தி ஆலையில் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முழுவதும் முடிவடைந்ததை அடுத்து, ஒரே ஒரு ஹெலிகாப்டர் மட்டும் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை, அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் இருந்து, ஏர் மார்ஷல் புட்டோலா (Butola) பெற்றுக் கொண்டார். முதல் கட்டமாக சில ஹெலிகாப்டர்கள், ஜூலை மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த ரக ஹெலிகாப்டர்களை இயக்குவது தொடர்பாக, தேர்வு செய்யப்பட்ட விமானப் படை குழு ஒன்று, அலபாமாவில் உள்ள அந்நாட்டு ராணுவத் தளத்தில் பயிற்சி எடுத்து வருகிறது.
The addition of AH-64 E (I) helicopter is a significant step towards modernisation of IAF’s helicopter fleet. The helicopter has been customized to suit IAF’s future requirements and would have significant capability in mountainous terrain. pic.twitter.com/prN3vjx4dH
— Indian Air Force (@IAF_MCC) May 11, 2019
அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரில் இரு வீரர்கள் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 10 ஆயிரத்து 433 கிலோ எடையையும் தாங்கும். மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இலக்குகளை துல்லியமாக் குறிவைக்கும் தொழில்நுட்பம் இதில் உண்டு. வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள், ஆயிரத்து 200 ரவுண்டுகள் வரை சுடக் கூடிய எம்.320 செயின் கன், மற்றும் ராக்கெட்டுகள் இந்த ஹெலிகாப்டர்களில் இருக்கும். இரவு நேரத்திலும் துல்லியமாக பார்க்க உதவும் தொழில்நுட்பமும் இந்த ஹெலிகாப்டரில் உள்ளது. போர்க்களத்தின் புகைப்படங்களையும் இந்த ஹெலிகாப்டரால் பெற முடியும்.
The first batch of the helicopters is scheduled to be shipped to India by July this year.
Selected aircrew & ground crew have undergone training at the training facilities at US Army base Fort Rucker, Alabama.
Read more on https://t.co/iGT8y5kfPL pic.twitter.com/pHRArBCjbz— Indian Air Force (@IAF_MCC) May 11, 2019