ஜூலை மாதம் விடுமுறை பட்டியல்: அடுத்த மாதத்தில் 15 நாள் வங்கிகள் இயங்காது

ஜூலை 2023 மாதம் வங்கி விடுமுறைகள்: ஜூலையில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும், மாநில வாரியான வங்கி விடுமுறை பட்டியலை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 26, 2023, 06:01 PM IST
  • ஜூலையில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.
  • ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும்.
  • பல்வேறு இடங்களில் பல்வேறு காரணங்களால் 8 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
ஜூலை மாதம் விடுமுறை பட்டியல்: அடுத்த மாதத்தில் 15 நாள் வங்கிகள் இயங்காது title=

வங்கி விடுமுறை பட்டியல்: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டர் படி, ஜூலை 2023ல் வங்கிகள் 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகளில் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, எட்டு விடுமுறைகள் வெவ்வேறு பண்டிகை, திருவிழா, தலைவர்கள் பிறந்த என அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றபடி விடுமுறைகள் இருக்கும்.

ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது

அதாவது ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. 5 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளில் அதாவது 7 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதேநேரம், பல்வேறு இடங்களில் பல்வேறு காரணங்களால் 8 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்ற பட்டியலைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..வங்கி நேரத்தில் மாற்றம்

ஜூலை 2023 வங்கி விடுமுறை பட்டியல்:

ஜூலை 5 (புதன்கிழமை)- குரு ஹர்கோவிந்த் ஜி பிறந்தநாள்- ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 6 (வியாழன்)- MHIP நாள்- மிசோரமில் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 11 (செவ்வாய்)- கேர் பூஜை- திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 13 (வியாழன்)- பானு ஜெயந்தி- சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 17 (திங்கட்கிழமை)-யு டிரோட் சிங் டே- மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 21 (வெள்ளிக்கிழமை)- Drukpa Tshe-zi- சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 28 (வெள்ளிக்கிழமை) - அஷூரா- ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
ஜூலை 29 (சனிக்கிழமை)-முஹரம் (தாஜியா)- திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ம.பி., தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், உ.பி., வங்காளம், புது தில்லி, பீகார், ஜார்கண்ட், ஹெச்பி ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

ஜூன் 30க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்பட வேண்டும்:

பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆகும். தற்போது வரை பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்காதவர்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரூ.1000 செலுத்தி இணைந்துக் கொள்ளலாம். ஜூன் 30க்குள் ஆதாருடன் பான் இணைக்கப்படாவிட்டால், பான் எண் செயலிழந்துவிடும். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க - இந்த ரகசியங்களை வங்கிகள் ஒருபோதும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News