Excercise Tips Tamil | இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் தினமும் ஒரு 10 நிமிடம் உடற்பயிற்சிக்கு ஒதுக்குவது கூட பெரிய விஷயமாகிவிட்டது. ஆனால் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. அதிக உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் குறைந்தபட்சம் சிம்பிளான உடற்பயிற்சிகளையாவது செய்ய வேண்டும். ஒரே இடத்தில் இருந்து கொண்டு குதிப்பது, நீண்ட தூரம் நடைப்பயிற்சி என இரண்டும் சிம்பிளான உடற்பயிற்சிகள். எல்லோரும் செய்யக்கூடியது. ஆனால், நடைப்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தேவைப்படும். ஜாக்கிங், அதாவது ஒரே இடத்தில் குதிப்பதற்கு 10 நிமிடம் இருந்தால் போதும். இருப்பினும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை தெரிந்து கொள்வது அவசியம்.
ஸ்பாட் ஜாக்கிங் vs நடைப்பயிற்சி எது பெஸ்ட்?
ஒரே இடத்தில் நின்று குதிப்பது, அதாவது ஸ்பாட் ஜாக்கிங் தீவிரமான உடற்பயிற்சி. குறுகிய நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கக்கூடியது. இந்த பயிற்சி செய்ய மிக குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். எந்த உபகரணமும் உங்களுக்கு தேவைப்படாது. வெளியில் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. காற்றோட்டமான இடத்தில் இருந்து சுமார் 10 நிமிடங்கள் குதித்தால் போதும். வேகமாக அல்லது நிதானமான கூட செய்யலாம். கலோரிகளை வேகமாக எரிக்கும். ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் உடற்பயிற்சியை தொடங்குபவர்கள் இதனை செய்யக்கூடாது. ஏனென்றால் இதய துடிப்பை வேகப்படுத்தும். நுரையீரல் சுவாசத்தை அதிகப்படுத்தும். மூட்டு வலி, தசை பிடிப்புகளை ஏற்படுத்தும். இதனை கவனித்தில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | 8 சதவீதம் கூடுதல் பென்சன் வேண்டுமா? ஓய்வூதியர்கள் இதை கண்டிப்பா செய்யுங்கள்
நடைப்பயிற்சி ஆரோக்கியமானது. சீரான வேகத்தில் இலகுவாக செய்யக்கூடிய பயிற்சி. ஆனால் கலோரிகள் எரிப்பு குறைவாக இருக்கும். ஜாக்கிங்கில் 10 நிமிடத்தில் கிடைக்கக்கூடிய பலன் இதில் 45 நிமிட பயிற்சி தேவைப்படும். ஆனால் இதய ஆரோக்கியம், மூட்டு வலி பிரச்சனைகளை எல்லாம் ஏற்படுத்தாது. உடற்பயிற்சியை புதிதாக தொடங்குபவர்கள் இங்கிருந்து தொடங்குவது மிகவும் நல்லது. தொடர்ச்சியாக நடைப்பயிற்சி செய்யும்போது 45 நிமிடங்களில் அதிகபட்சம் 150 முதல் 200 கலோரிகளை குறைக்கலாம். ஸ்பாட் ஜாக்கிங்கில் 10 நிமிடத்தில் அதிகபட்சம் 120 கலோரிகளை குறைக்க முடியும்.
எதை தேர்வு செய்வது சிறந்தது?
இரண்டு உடற்பயிற்சிகளில் எதை தேர்வு செய்வது என்றால்? புதிதாக உடற்பயிற்சி தொடங்குபவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது. தொடர்ச்சியாக நடைப்பயிற்சி செய்து அதன்பிறகு ஸ்பாட் ஜாக்கிங்கிற்கு வருவது நல்லது. இருதய பிரச்சனை, மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் நடைப்பயிற்சியை தேர்வு செய்வது மட்டுமே சிறந்த முடிவாக இருக்கும். ஸ்பாட் ஜாக்கிங் செய்யும்போது மனநல ஆரோக்கியத்துக்கு முக்கியமான எண்டோர்பின்கள் ஹார்மோன் சீக்கிரம் வெளியாகும். சுறுசுறுப்பு, மன அழுத்ததில் இருந்து விரைவான நிவாரணம் ஆகியவற்றுக்கு ஸ்பாட் ஜாக்கிங் சிறப்பானது. நடைப்பயிற்சி மன அமைதி, தியான குணத்தை அதிகரிக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பயிற்சிகளை தேர்வு செய்வது அவசியம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் உடனடியாக ஸ்பாட் ஜாக்கிங் செய்யலாம். உடற்பயிற்சிக்கு புதியவர்கள் என்றால் முதலில் நடைப்பயிற்சியில் இருந்து தொடங்கவும்.
மேலும் படிக்க | காலை 7 மணிக்கு முன் எழுவதால் ஏற்படும் 7 நல்ல மாற்றங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ